லஞ்ச் சாப்பிட்டது குத்தமா? -வேலையை விட்டு தூக்கிய பெண்ணால் லண்டன் கம்பெனிக்கு நேர்ந்த கதி!

லஞ்ச் சாப்பிட்டது குத்தமா? -வேலையை விட்டு தூக்கிய பெண்ணால் லண்டன் கம்பெனிக்கு நேர்ந்த கதி!
லஞ்ச் சாப்பிட்டது குத்தமா? -வேலையை விட்டு தூக்கிய பெண்ணால் லண்டன் கம்பெனிக்கு நேர்ந்த கதி!

உலக அளவில் ஊழியர்களுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருக்கக் கூடியதாக தற்போது இருப்பது பணிநீக்க நடவடிக்கைதான். ட்விட்டர், மெட்டா, ஆப்பிள் என பல டெக் ஜாம்பவான்களே தங்களது ஊழியர்களின் சீட்டை எந்த காரணமும் சொல்லாமல் அதிரடியாக கிழித்து வருகிறார்கள்.

இப்படி இருக்கையில், லண்டனில் உள்ள ஒரு கல்வி நிறுவனத்தில் பணியாற்றிய பெண் தனது சக ஊழியர்களுடன் மதிய உணவுக்கு சென்றதற்காக வேலையில் இருந்து தூக்கப்பட்டிருக்கும் சம்பவம் நடந்திருக்கிறது. இங்கிலாந்தின் வெஸ்ட் மிட்லாண்ட்ஸில் உள்ள டட்லி பகுதியில் இருக்கிறது Lead education and development என்ற நிறுவனம். இதில் பணியாற்றி வந்த டிரேசி ஷெர்வுட் என்ற பெண்ணைதான் அந்த நிறுவனம் தடாலடியாக பணி நீக்கம் செய்திருக்கிறது. கடந்த 2018ம் ஆண்டு நடந்திருக்கிறது.

டிரேசியை பணி நீக்கம் செய்ததற்கு காரணமாக, தங்களது நிறுவனம் பல பரிமாணங்களில் வளர்ச்சியை எட்டாமல் இருந்ததாகவும், நிறுவனத்தின் இதுப்போன்ற சவாலான நேரங்களில் ஒருவர் வேலைக்கு முன்னுரிமை அளிக்காமல் பணி நேரத்தில் சாப்பிட சென்றதை ஏற்றத்தக்கதல்ல என கருதியே அப்படி நடவடிக்கை எடுத்ததாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

மேலும் டிரேசி டிஸ்மிஸ் செய்வதற்கு முன்புதான் அவருக்கு இயக்க தலைவராக பதவி உயர் கொடுத்ததாகவும் அந்த நிறுவனம் கூறியிருக்கிறது. இருப்பினும் இந்த விளக்கத்தை ஏற்றுக் கொள்ளாத டிரேசி ஷெர்வுட், வேலைவாய்ப்புக்கான தீர்பாயத்தை நாடியிருக்கிறார். அந்த வழக்கு இத்தனை ஆண்டுகளாக விசாரணையில் இருந்து வந்திருக்கிறது.

இந்த நிலையில், வேலையில் நேர்மையில்லாமல் பணி நேரத்தில் மதிய உணவுக்கு சென்றிருக்கக் கூடாது என அந்த கல்வி நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் மேக்சின் டிரேசி மீது குற்றஞ்சாட்டியிருந்தாலும் தீர்பாயத்தில் டிரேசிக்கு ஆதரவாகவே தீர்ப்பளிக்கப்பட்டிருக்கிறது. அதன்படி, டிரேசியை பணிநீக்கம் செய்தது நியாயமற்றது என்றுக் குறிப்பிட்டு அவருக்கு இழப்பீடாக 12 லட்சம் ரூபாய் வழங்க வேண்டும் என்றும் Lead education and development நிறுவனத்துக்கு உத்தரவிட்டிருக்கிறது லண்டன் தீர்ப்பாயம்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com