புஸ்வானமான 10 மாத இல்லற வாழ்வு.. கணவனால் மனைவிக்கு நேர்ந்த ஷாக்.. பகீர் தகவல்கள்!

புஸ்வானமான 10 மாத இல்லற வாழ்வு.. கணவனால் மனைவிக்கு நேர்ந்த ஷாக்.. பகீர் தகவல்கள்!
புஸ்வானமான 10 மாத இல்லற வாழ்வு.. கணவனால் மனைவிக்கு நேர்ந்த ஷாக்.. பகீர் தகவல்கள்!

காதலித்து திருமணம் செய்துக்கொண்டு 10 மாதங்கள் ஒன்றாக வாழ்ந்த பிறகு தனது கணவன் ஒரு பெண் என தெரிய வந்துள்ளது என இந்தோனேஷியாவைச் சேர்ந்த பெண் ஒருவர் கூறியுள்ளது பரபரப்பை கிளப்பியிருக்கிறது.

இந்தோனோஷியாவின் ஜாம்போ பகுதியைச் சேர்ந்தவர் 22 வயதான பெண். இவர் ஆன்லைன் டேட்டிங் ஆப் மூலம் ஒரு நபருடன் கடந்த 2021 மே மாதம் முதல் பழகி வந்திருக்கிறார். அந்த ஆண், தன்னை அறுவை சிகிச்சை நிபுணர் என்றும், நிலக்கரி வியாபாரம் செய்யும் பிசினஸ் மேனாகவும் அறிமுகம் செய்துக் கொண்டிருக்கிறார்.

இதனையடுத்து, அடுத்த மூன்று மாதங்களிலேயே இருவரும் ரகசியமாக திருமணமும் நடத்தி 10 மாதங்களாக வாழ்ந்து வந்திருக்கிறார்கள். முதலில் மணப்பெண்ணின் வீட்டிலேயே புதுமணத் தம்பதி வசித்து வந்திருக்கிறார்கள்.

அப்போது, திருமணத்தை பதிவு செய்வதற்காக அந்த நபர் எந்த ஆவணமும் கொடுக்காமல் காலம் தாழ்த்தி வந்ததால் அவர் மீது பெண்ணின் பெற்றோருக்கு சந்தேகம் எழுந்திருக்கிறது. இதனால் மனைவியுடன் தெற்கு சுமத்ராவுக்கு தனியாக குடிபெயர்ந்திருக்கிறார்.

அங்கு, அந்த பெண்ணை அவரது பெற்றோர் உள்ளிட்ட எவரிடமும் பேசவிடாமல் அவரை அடைத்து வைத்திருந்திருக்கிறார். மேலும் தான் ஒரு தொழிலதிபராக இருந்தும் மனைவியின் பெற்றோரிடம் இருந்து அவ்வப்போது பணத்தையும் வாங்கியிருக்கிறாராம். அதன் மதிப்பு 15 லட்ச ரூபாய்.

இப்படி இருக்கையில், தங்களது மகள் எங்கு இருக்கிறார் என்பதே அந்த பெண்ணின் பெற்றோருக்கு தெரியாமல் இருந்தாதால் ஜாம்பி போலீசாரின் உதவியுடன் அவரை கண்டுபிடித்து மீட்டிருக்கிறார்கள்.

இந்த நிலையில்தான், 10 மாதங்களாக கணவனாக கருதப்பட்டவர் ஆணே இல்லை, அவர் உண்மையில் ஒரு பெண் என பாதிக்கப்பட்ட பெண் போலீசாரிடம் கூறியிருக்கிறார். உடல் உறவு கொள்ளும் போது கூட, வீட்டில் உள்ள விளக்குகளை அணைத்துவிட்டு, எனது கண்ணை கட்டிவிடுவார் எனவும் அந்த பெண் தெரிவித்திருக்கிறார்.

இதுபோக, மோசடி செய்த அந்த பெண்ணின் கல்விச்சான்றிதழ் கூட போலியானதுதான், இது அவர் மீதான குற்றச்சாட்டை நிரூபிக்க உதவியாக இருக்கும் எனக் கூறி அவர் மீது பாதிக்கப்பட்ட பெண்ணின் பெற்றோர் புகாரளித்திருக்கிறார். இதற்காக ஏமாற்றிய அந்த பெண் 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை பெறுவதற்கு வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது. 

இதனையடுத்து இந்த விவகாரம் இந்தோனேஷியாவின் ஜாம்பி நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்து வருகிறது. மேலும் பாதிக்கப்பட்ட அந்த பெண் சமூக வலைதளம் மூலம் தனக்கான ஆதரவை திரட்டி வருகிறார். தற்போது இந்த சம்பவம் இந்தோனேஷியாவில் பெரும் பரபரப்பையும், அதிர்வலைகளையும் ஏற்படுத்தியிருக்கிறது.

ALSO READ: 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com