“பெண்கள் பீட்சா சாப்பிடுவதை காட்டக் கூடாது” - ஈரானில் புதிய டிவி தணிக்கை விதிகள்

“பெண்கள் பீட்சா சாப்பிடுவதை காட்டக் கூடாது” - ஈரானில் புதிய டிவி தணிக்கை விதிகள்
“பெண்கள் பீட்சா சாப்பிடுவதை காட்டக் கூடாது” - ஈரானில் புதிய டிவி தணிக்கை விதிகள்

ஈரானின் புதிய தொலைக்காட்சி தணிக்கை விதிகளின்படி பெண்கள் பீட்சா மற்றும் சாண்ட்விச்கள் சாப்பிடும் காட்சிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், ஆண்கள் பெண்களுக்கு தேநீர் வழங்கும் காட்சிகளை காட்டவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

புதிய ஈரானிய தொலைக்காட்சி தணிக்கை விதிகளின்படி பெண்கள் சிவப்பு நிற பானங்களை குடிப்பதை காட்டக்கூடாது. பெண்கள் திரையில் தோல் கையுறைகளை அணியக்கூடாது என்ற கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளது.

உள்நாட்டில் எடுக்கப்படும் ஆண்களும் பெண்கள் தொடர்பான அனைத்து காட்சிகள் மற்றும் புகைப்படங்கள் புதிய வழிகாட்டுதல்கள் பின்பற்றப்படுவதை உறுதி செய்யும் என்று இஸ்லாமிய குடியரசு ஈரான் ஒளிபரப்பு எனப்படும் ஐஆர்ஐபியின் தலைவர் அமீர் ஹொசைன் ஷம்ஷாதி கூறினார். மேலும், ஈரானிய ஹோம் தியேட்டர் மற்றும் ஸ்ட்ரீமிங் தளங்களுக்கு உரிமம் வழங்குவதற்கும் மேற்பார்வை செய்வதற்கும் ஐஆர்ஐபி பொறுப்பாகும்.

நடிகை எல்னாஸ் ஹபீபியின் முகத்தை கேமராவில் காட்டக்கூடாது என்ற புதிய கட்டுப்பாடுகளின் காரணமாக ஈரானிய டாக்‌ஷோவான பிஷ்கூ நிகழ்ச்சியின் போது அவரின் முகத்தை காட்டாமல் அவரின் குரல் மட்டுமே ஒளிபரப்பியது விமர்சனங்களை உருவாக்கியிருக்கிறது.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com