நாயால் கொடூரமாக தாக்கப்பட்ட பெண்! லிஃப்டில் உருண்டு தப்பிக்கும் பகீர் வீடியோ!
கொலம்பியாவில் 25 வயது மதிக்கத்தக்க பெண்ணை நாய் ஒன்று கொடூரமாக தாக்கி இழுத்து செல்லும் பகீர் வீடியோ வெளியாகி உள்ளது.
வெனிசுலாவுடனான வடகிழக்கு எல்லைக்கு அருகில் கொலம்பியா நாட்டில் குகுடா என்ற ஒரு நகரம் உள்ளது. அங்குள்ள அடுக்குமாடி குடியிருப்பின் தரைத்தளத்திற்கு 25 வயது மதிக்கத்தக்க பெண் சென்றார். அப்போது பிட் புல் எனும் இனத்தை சேர்ந்த ஒரு கறுப்பு நாய் அந்த பெண்ணை தாக்கத் துவங்கியுள்ளது. நாயின் தாடைகளைக் கையில் பிடித்துக்கொண்டு அந்தப் பெண் தப்பிக்க முயற்சித்த போதிலும் அந்த நாய் தொடர்ந்து கொடூரமாக தாக்கியுள்ளது. நாயிடமிருந்து தப்பிக்க தன் அபார்ட்மெண்டிலிருந்து லிஃப்ட்டுக்குள் அதை இழுத்துச் சென்றுள்ளார்.
லிஃப்டில் இருந்த கண்காணிப்பு கேமராவில் நாய் எவ்வளவு கொடூரமாக அந்த பெண்ணை தாக்குகிறது என்பது பதிவாகியுள்ளது. நாயுடன் போராடியபடியே வெளியே சென்று பக்கத்து வீட்டுக்காரர் உதவியை நாடி உயிரை காப்பாற்றியுள்ளார் அந்த பெண். தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவர், வலது கையில் விரல்களில் எலும்பு முறிவுகள், இடது கையில் பல எலும்பு முறிவுகள் மற்றும் உடலில் பல காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகிறார்.
தற்போது பெண்ணை தாக்கிய அந்த நாய் 10 நாட்கள் காவலில் வைக்கப்பட்டுள்ளது. அதன் நன்னடத்தையை ஆராய்ந்து அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். பெண்ணை நாய் தாக்கும் பகீர் வீடியோ டிவிட்டரில் வெளியாகி வைரலாகி வருகிறது. வீடியோவைப் பார்க்க: https://twitter.com/Margo06971686/status/1505654210083401730