பச்சிளம் குழந்தையை அடுப்பில் இட்டு கொலை செய்த தாய்..!
பிறந்து சில நாட்களே ஆன பச்சிளம் குழந்தையை அடுப்பில் தூக்கி போட்டு எரித்து கொலை செய்த கொடூர சம்பவம் ரஷ்யாவில் அரங்கேறியுள்ளது.
ரஷ்யாவின் கெமெரேவோ பிராந்தியத்திலுள்ள, பிலகோவெசாங்க பகுதியில் வசிக்கும், பெண் வேலை செய்யும் நிறுவனத்திடமிருந்து மறைத்து பெண்குழந்தையை பெற்றெடுத்தாள். அவருடைய கணவர் மீன்பிடிக்கும் தொழில் செய்பவர். இவர்களுக்கு ஏற்கனவே மூன்று குழந்தைகள் உள்ள நிலையில், தற்போது நான்காவது குழந்தை பிறந்துள்ளது.
நான்காவது குழந்தை பிறந்தது வேலை செய்யும் நிறுவனத்திற்கு தெரிந்தால் எங்கு வேலை போய் விடுமோ என்ற அச்சத்தில், தன் கணவர் வேலைக்கு சென்ற நேரத்தில் பச்சிளம் குழந்தையை எரிந்து கொண்டிருந்த அடுப்பில் வீசி கொலை செய்துள்ளார்.
மீன்பிடித்தொழிலுக்காக சென்றிருந்த கணவன் வீடு திரும்பிய நிலையில், குழந்தை கொல்லப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். குழந்தையை கருகிய நிலையில் மீட்டெடுத்த அவர் கொடூர தாயை சரமாரியாக தாக்கி போலீசாரிடம் ஒப்படைத்துள்ளார். அப்பெண் கைது செய்யப்பட்டதோடு மனநல காப்பகத்தில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.