அமெரிக்காவைச் சேர்ந்த பெண் ஒருவர் சாலட் தயாரிப்பதற்காக லெட்டியூஸ் எனப்படும் கீரைகளை சுத்தம் செய்ய வாஷிங் மெஷின் பயன்படுத்தி வெளியிட்ட வீடியோ வெளியாகி வைரலாகும் நிலையில், நெட்டிசன்களின் கிண்டலுக்கும் ஆளாகியுள்ளார்.
தற்காலத்தில் செல்ஃபோன், இணைய பயன்பாடு அதிகரித்து காணப்படும் இந்த நேரத்தில், நல்ல விஷயங்களை தேடி தேடி கற்றுக்கொள்ளும் உலகமும் உள்ளது. அதேநேரத்தில் தற்போதெல்லாம் லைஃப் ஹேக்ஸ் என்ற பெயரில் சிலர் வெளியிடும் வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் அவர்களுக்கே வினையாக வருவதும் உண்டு. குறிப்பாக, டிக் டாக், இன்ஸ்டாகிராம், ட்விட்டர், ஃபேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்களில் காணப்படும் வீடியோக்கள் நம்மை அதிர வைப்பதும் உண்டு.
அந்த வகையில், அமெரிக்காவின் அரிசோனா மாநிலம் கான்வே நகரத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் பதிவிட்டுள்ள வித்தியாசமான வீடியோ வைரலாகி வருகிறது. ஆஷ்லே எக்கோல்ஸ் என்கிற பெண்மணி டிக் டாக்கில் வீடியோக்கள் மூலம் புகழ்பெற்றவர். இந்நிலையில், சாலட் தயாரிப்பதற்கு எளிய முறையில், லெட்டியூஸ் எனப்படும் கீரைகளை இப்படி சுத்தம் செய்யலாம் என்று வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் நம் வீட்டில் துணிகள் துவைக்க பயன்படுத்தப்படும் வாஷிங் மெஷினில் நிறைய கீரைகளை வைத்துவிட்டு, டெலிகேட் பொத்தானை அழுத்துகிறார். சுமார் 55 நிமிடங்கள் ஓடியப்பின்பு நிற்கும் வாஷிங் மெஷினில் இருந்து ப்ரெஷ்ஷான கீரைகளை மகிழ்ச்சியுடன் எடுக்கிறார்.
இதனை சுமார் 11 நிமிடங்கள் ஓடும் வீடியோவாக எடுத்து அந்தப் பெண்மனி இந்த வீடியோவை அவர் தனது சமூகவலைத்தளத்தில் பதிவிட்டதை அடுத்து பேசுபொருளாகியுள்ளது. அழுக்கு துணிகள் துவைக்கும் வாஷிங்மெஷினில் நாம் சாப்பிடும் கீரைகளை சுத்தம் செய்வதா என்று ஒரு நெட்டிசன் அதிர்ச்சி மாறாமல் வியப்புடன் கேட்டுள்ளார். அதேபோல், கீரைகள் வாஷிங்மெஷினை வீணாக்கிவிடும் என்று மற்றொருவரும், இப்படி சுத்தம் செய்து சாப்பிட்டால் பாக்டீரியாவால் வயிற்று கோளாறு ஏற்படும் என்று பலவாறாக நெட்டிசன்கள் தங்களது கருத்துக்களை முன்வைத்து வருகின்றனர். இந்த வீடியோ 5 லட்சம் பார்வையாளர்களை கடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
https://v19-web-newkey.tiktokcdn.com/b0a5645c7942412a058f5948537df73e/62bb4041/video/tos/maliva/tos-maliva-ve-0068c799-us/b91cb5f5052e4c90a425d54987b203db/?a=1988&ch=0&cr=0&dr=0&lr=tiktok_m&cd=0%7C0%7C1%7C0&cv=1&br=3962&bt=1981&btag=80000&cs=0&ds=3&ft=lcLrKH._Myq8Ztnq8we2NJ1eyl7Gb&mime_type=video_mp4&qs=0&rc=NzQ3M2UzaWk0PDw7ZjtoM0Bpam5pZ2U6ZjQzZDMzZzczNEBeYzEtXzMyNmIxLV4yX15hYSNlaC02cjRvcGRgLS1kMS9zcw%3D%3D&l=202206281153580102231280501000B3D1