ரூ. 1.5 லட்சமா 'ஹேண்ட் வாஷ்'? -ஆன்லைனில் ஆர்டர் செய்து ஏமாந்த பெண்

ரூ. 1.5 லட்சமா 'ஹேண்ட் வாஷ்'? -ஆன்லைனில் ஆர்டர் செய்து ஏமாந்த பெண்
ரூ. 1.5 லட்சமா 'ஹேண்ட் வாஷ்'? -ஆன்லைனில் ஆர்டர் செய்து ஏமாந்த பெண்

ஆன்லைனில் ஒன்றரை லட்சம் ரூபாய் மதிப்புள்ள ஆப்பிள் ஐ போன் ஆர்டர் செய்தப் பெண்ணுக்கு, பார்சலில் ஹாண்ட் வாஷ் வந்ததால் அதிர்ச்சியடைந்துள்ளார்.

தொழில்நுட்பம் அதிவேகத்தில் வளர்ந்துவரும் நிலையில், இணையதளங்கள் மூலம் பொருட்களை ஆர்டர் செய்து வாங்குவது அதிகரித்து வருகிறது. இதனால் ஆங்காங்கே பொருள் மற்றும் பண மோசடிகளும் நடைபெறுவது வழக்கமாகி வருகிறது. அந்தவகையில் இங்கிலாந்தில் ஒரு பெண், விலை உயர்ந்த ஆப்பிள் ஐ போனை ஆர்டர் செய்து ஏமாந்துள்ளார்.

இங்கிலாந்தில் வசித்து வரும் கௌலா லாஃப்கெய்லி என்றப் பெண், சில நாட்களுக்கு முன்னர், அங்குள்ள பிரபலமான ஆன்லைன் தளம் ஒன்றின் மூலம், ஸ்கை மொபைலில் ஆப்பிள் 13 ப்ரோ மேக்ஸ் ஐ போனை ஆர்டர் செய்துள்ளார். இதன் விலை சுமார் ஒன்றரை லட்சம் ஆகும். இந்தியாவில் இந்த ஐ போனின் விலை ரூ. 1,29,900. இந்நிலையில், ஐ போன் ஆர்டர் செய்தப் பெண், அடுத்த நாளில் டெலிவரி செய்யுமாறு கூறியுள்ளார். ஆனால், போக்குவரத்து நெரிசலில் மாட்டிக் கொண்டதால், குறிப்பிட்ட தேதியில் ஐ போனை டெலிவரி செய்ய முடியாது என்று டெலிவரி செய்யும் நபர் கூறியுள்ளார். பின்னர், 2 நாட்கள் கழித்து அந்தப் பெண்ணுக்கு பார்சல் வந்துள்ளது.

அதனைப் பிரித்து பார்த்த அந்தப் பெண் அதிர்ச்சியடைந்துள்ளார். ஏனெனில், ஆப்பிள் ஐ போனுக்கு பதிலாக, பார்சலில் ஹெண்ட் வாஷ் இருந்துள்ளது. இதையடுத்து உடனடியாக அந்தப் பெண் ஸ்கை மொபைலுக்கு இதுகுறித்து புகார் தெரிவித்துள்ளார்.  இதில் நடந்த விசாரணையில், ஆப்பிள் ஐ போனை டெலிவரி செய்யும் போது, இந்த மோசடி நடந்துள்ளது தெரியவந்துள்ளது. கௌலா லாஃப்கெய்லி, ஆப்பிள் ஐ போனை ஆர்டர் செய்துவிட்டு காத்திருந்தபோது, அவர் வீட்டில் இருந்தபோதும், கதவை தட்டாமலே வீடு பூட்டியிருப்பதாக டெலிவரி செய்யும் நபர் கூறியிருப்பதும் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து மோசடி குறித்து விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாக ஆன்லைன் ஆர்டர் எடுத்த டெலிவரி நிறுவனம் கூறியுள்ளது. மேலும், முழுவதுமாக ஆப்பிள் ஐ போனுக்கு அந்தப் பெண் பணம் செலுத்தவில்லை என்றாலும், டெலிவரி செய்த நபர் மோசடி செய்துள்ளது தெரியவந்துள்ளது. ஆப்பிள் ஐ போன் ஆன்லைனில் ஆர்டர் செய்பவர்களுக்கு, இதுபோன்று நிகழும் சம்பவங்கள் இது புதிதல்ல.

ஏற்கனவே, அண்மையில் கேரளாவைச் சேர்ந்த நபர் ஒருவர், ஆப்பிள் 12 ஐ போனை ஆர்டர் செய்துவிட்டு காத்திருந்தநிலையில், பார்சலில் பாத்திரம் கழுவும் சோப்பும், உடன் ரூ. 5 காயினும் வந்தது. சமீப காலமாக இதுபோல சம்பவங்கள் தொடர்ந்து நடைபெறுவதால், இணையதளம் மூலம் ஆர்டர் செய்வபர்களின் நம்பிக்கையை இந்த மோசடி சம்பவங்கள் குலைக்கின்றது என்றே கூறலாம்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com