ரயில்வே ஸ்டேஷன் ஹஸ்பண்ட்டா? ஷாக் கொடுக்கும் பெண்
ரயில்வே ஸ்டேஷனை காதலித்து அதையே திருமணம் செய்துகொண்டதாக இளம் பெண் ஒருவர் கூறியுள்ள சம்பவம் அதிர்ச்சி கொடுத்துள்ளது.
பொதுவாக உயிருள்ள ஜீவராசிகளை காதலிப்பதுதான் வழக்கம். ஆனால் அதிசயமாக ரயில்வே ஸ்டேஷனை காதல் செய்த சுவாரஸ்ய சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் காலிபோர்னியா மாகாணத்தைச் சேர்ந்தவர் கரோல் சான்டே பி (40). இவர் தன்னார்வ தொண்டு செய்பவர். இவரது வீட்டிற்கு அருகில் சாண்டா ஃபே ரயில் நிலையம் உள்ளது. 2011 முதல் இந்த ரயில்வே ஸ்டேஷன் மீது இவருக்கு காதல். ’கடந்த 4 ஆண்டுகளாக காதலித்து 2015-ம் ஆண்டு கிறிஸ்துமஸ் தினத்தன்று அந்த ரயில்வே ஸ்டேஷனை திருமணம் செய்து கொண்டேன்’ என்று கூறியுள்ளார் கரோல்.
தினமும் 45 நிமிடம் பஸ்சில் பயணம் செய்து அந்த ரயில்வே ஸ்டேஷனுக்கு சென்று அங்கு சிறிது நேரம் அமர்ந்து வருவதை வழக்கமாகக் கொண்டுள்ளார் கரோல். கடந்த ஆண்டு கிறிஸ்துமஸ் பண்டிகை அன்று தனது முதல் திருமண நாளை ரயில்வே ஸ்டேஷனில் கொண்டாடியுள்ளார்.
காதலை பற்றி கூறிய கரோல், 'தினமும் அந்த ரயில் நிலையம் சென்று ஹலோ சொல்வேன், பின் அங்கேயே சிறிது தூரம் நடப்பேன். அங்குள்ள சுவர் மீது சாய்ந்து கொண்டு ரயில் நிலையத்துடன் பேசி கொண்டிருப்பேன். டயட்ரா என ரயில்வே ஸ்டேஷனுக்கு அதாவது என் கணவருக்கு பெயர் வைத்துள்ளதாகவும் கூறியுள்ளார். நான் ரயில் நிலையத்துடன் பேசுவதை யாரும் கவனிக்காதபடி பார்த்து கொள்வேன். இந்த நிகழ்வு பாலியல் காரணமில்லாமல், மனநிலை சார்ந்த அன்பு என கரோல் தெரிவித்துள்ளார்