3 அடி வீடுதான்... ஆனால்.. வாடகை மட்டும் 1.7 லட்சம் தெரியுமா? #Video
3 அடி வீடும், அதற்கு பெண் ஒருவர் லட்சக்கணக்கில் கொடுக்கும் வாடகையும் பேசுபொருளாக மாறியுள்ளது. எங்கே? விரிவாகப் பார்க்கலாம்.
பொதுவாகவே, நகரின் முக்கிய பகுதிகளில் வீட்டு வாடகை என்பது அதிகமாகவே இருக்கும். அதற்கு ஏற்றார்போல வீடும் அமைந்திருக்கும். ஆனால், நியூயார்கில் இளம்பெண் ஒருவர் வாங்கியிருக்கும் வீட்டின் விலை லட்சங்களை தாண்டினாலும், வீட்டின் அளவு மிகச்சிறியதாகவே இருக்கிறது.
எமினி என்ற பெண் இதுதொடர்பாக தனது சமூக வலைதளப்பக்கமான டிக்டாக்கில் வீடியோ ஒன்றினை வெளியிட்டுள்ளார். சுமார் 2. 5 முதல் 3 அடி வரை மட்டுமே இருக்கும் அந்த வீட்டில், மிகச்சிறிய அளவிலேயே குளியலறை இருக்கிறது. இதனை தனது வீடியோவில் காட்டிய எமினி, toilet flush tank மேலேயே கை கழுவும் சிங்க் இருப்பதையும் சுட்டிக்காட்டுகிறார்.
toilet flush tank மேலேயே கை கழுவும் சிங்க் இருப்பது புது வித டிசைன் ஒன்றும் கிடையாது. இடத்தை மிச்சப்படுத்துவதற்காகதான் இந்த முறையை கையாண்டிருக்கிறார்கள். எப்பொழுதெல்லாம் கை கழுவ வேண்டுமோ, அப்பொழுதெல்லாம் toilet flush tank ஐயும் அழுத்த வேண்டுமென்று அந்த பெண் வேதனை தெரிவித்துள்ளார். அதுமட்டுமல்ல இந்த வீட்டின் மாத வாடகை 2 ஆயிரம் டாலர் இந்திய மதிப்பில் ரூ.17 லட்சம்.
இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் இதுதான் நியூயார்க்கிலேயே மிகச்சிறிய குளியலறையாக இருக்குமோ? என்று பல கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
இந்தபதிவு தற்போது, 13 மில்லியன் பார்வைகளையும், இன்ஸ்டாகிராமில் கிட்டத்தட்ட 43,000 லைக்குகளையும் பெற்றுள்ளது. இது பயனர்களிடமிருந்து ஏராளமான எதிர்வினைகளைத் தூண்டியுள்ளது.