தண்டவாளத்தில் படுத்து போட்டோவுக்கு போஸ்! இங்கிலாந்து ரயில்வேயை மிரள வைத்த பெண்மணி

தண்டவாளத்தில் படுத்து போட்டோவுக்கு போஸ்! இங்கிலாந்து ரயில்வேயை மிரள வைத்த பெண்மணி
தண்டவாளத்தில் படுத்து போட்டோவுக்கு போஸ்! இங்கிலாந்து ரயில்வேயை மிரள வைத்த பெண்மணி

புகைப்படங்களுக்கு போஸ் கொடுப்பதற்காக, ஒரு பெண் இங்கிலாந்தில் ரயில்வே தண்டவாளத்தில் படுத்துக் கொண்ட காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

புகைப்படம் எடுப்பதும் ஒருவித போதைதான். அந்த போட்டோ எடுக்கும் போதைக்கு அடிமையான பல ரிஷ்கான இடங்களில் கூட போட்டோவுக்கு போஸ் கொடுக்க முற்பட்டு ஆபத்தில் சிக்கியுள்ளார். சிலர் இப்படி நிதானம் இல்லாமல் போஸ் கொடுத்து உயிரையும் விட்டிருக்கிறார்கள்.

அந்தவகையில், இங்கிலாந்து பெண்மணி ஒருவர் சிக்கியிருக்கிறார். அந்தப் பெண்மணி செய்த செயலை கண்டு இங்கிலாந்து ரயில்வே துறையே சற்று மிரண்டு போய்விட்டது. இங்கிலாந்தில் ரயில் தண்டவாளத்தில் படுத்துக்கொண்டு புகைப்படங்களுக்கு போஸ் கொடுத்த அந்தப் பெண், சி.சி.டி.வி காட்சிகள் மூலமாக பிடிபட்டுவிட்டார்.

அடுத்து இங்கிலாந்தின் நெட்வொர்க் ரெயில் அவருக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. அந்தப் பெண் செய்த இந்த காட்சிகளைப் பகிர்ந்துகொண்ட நெட்வொர்க் ரயிலின் ட்விட்டர் பக்கம் "இல்லை, இல்லை, இல்லை. லெவல் கிராசிங்குகள் புகைப்படம் எடுப்பதற்கான இடம் அல்ல. லெவல் கிராசிங்களில் மிகவும் எச்சரிக்கையாக இருப்பதை வழக்கமாக்கிக்கொள்ளுங்கள், நாம் நமது குழந்தைகளுக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டும். ஒரு சிறு தவறுகூட வாழ்க்கையையே மாற்றும் விளைவுகளை ஏற்படுத்தும்" என தெரிவித்திருக்கிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com