காதலனை கொன்று துண்டுகளாக்கி சமைத்து பரிமாறிய காதலி!

காதலனை கொன்று துண்டுகளாக்கி சமைத்து பரிமாறிய காதலி!

காதலனை கொன்று துண்டுகளாக்கி சமைத்து பரிமாறிய காதலி!
Published on

தனது முன்னாள் காதலனைக் கொன்று சமைத்து, கட்டிடத் தொழிலாளர்களுக்கு பரிமாறிய மொராக்கோ பெண், அபுதாபியில் கைது செய்யப்பட்டார்.

30 வயதுள்ள மொராக்கோ நாட்டுப் பெண் ஒருவர், ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள அல் ஐன் பகுதியில் வீட்டு வேலை செய்துவந்தார். இவருக் கும் அவர் நாட்டில் இருந்து அங்கு வேலைக்காக வந்திருந்த 20 வயது வாலிபருக்கும் பழக்கம் ஏற்பட்டது. பின்னர் அது தகாத உறவாக மாறியது. 

இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன், கருத்துவேறுபாடு காரணமாக அந்தப் பெண்ணை பிரிந்தார் வாலிபர். இதனால் கோபமான அந்த பெண், அந்த வாலிபரை பழிவாங்க தருணம் பார்த்துக் கொண்டிருந்தார்.

இந்நிலையில் அந்த வாலிபரை கடந்த சில மாதங்களுக்கு முன் காண வில்லை. இதையடுத்து அவரது சகோதரர், மொரக்கோ பெண்ணை சந்தித்து விசாரித்தார். அவர், ’நானும் உன் சகோதரனும் பிரிந்து விட்டோம். அவரைப் பற்றி எனக்குத் தெரியாது’ என்று கோபமாக கூறியுள்ளார். இந்நிலையில் அவர் வசித்த இடத்தில், மிக்சியில் மனித பல் ஒன்று கிடந்ததைப் பார்த்து சந்தேகம் அடைந்தார் சகோதரர்.

இதையடுத்து போலீசில் புகார் செய்தார். அவர்கள் வந்து விசாரித்ததை அடுத்து, அந்த வாலி பரை கொன்றுவிட்டதை ஒப்புக்கொண்டார், அந்தப் பெண். அதோடு, கொன்று உடலை துண்டு துண்டாக்கி, மிக்ஸியில் போட்டு அரைத்துள்ளார். பின்னர் அதை சமைத்து அருகில் பணியாற்றிக் கொண்டிருந்த கட்டிடத் தொழிலாளர்களுக்கு அதை பரிமாறியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 

மிக்சியில் அரைபடாத உடல் பாகங்களை நாய்களுக்கு விருந்தாக்கிய விவரமும் தெரிய வந்துள்ளது. அவரை கைது செய்துள்ள போலீசார், அவருக்கு மனநல பரிசோதனை நடத்தியுள்ளனர். இதுபற்றி தொடர்ந்து விசாரணை நடத்தியுள்ளனர். இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com