கொரோனா உறுதியானதை அறிந்து வணிக வளாகத்தில் கதறி அழுத பெண் - வைரல் வீடியோ

கொரோனா உறுதியானதை அறிந்து வணிக வளாகத்தில் கதறி அழுத பெண் - வைரல் வீடியோ

கொரோனா உறுதியானதை அறிந்து வணிக வளாகத்தில் கதறி அழுத பெண் - வைரல் வீடியோ
Published on

தனக்கு கொரோனா பாசிட்டிவ் என அறிந்த ஒரு பெண் பொது இடத்தில் கதறி அழுத வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

கொரோனா வைரஸ் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. லட்சக்கணக்கானவர்கள் கொரோனா வைரஸால் உயிரிழந்துள்ளனர். கொரோனாவைக் கட்டுப்படுத்த உலக நாடுகள் பல முயற்சிகளை எடுத்து வருகின்றன. கொரோனாவில் இருந்து தங்களை பொதுமக்கள் தற்காத்துக் கொள்ள வேண்டுமென அரசு கேட்டுக்கொண்டுள்ளது. இந்நிலையில் சீனாவில் தனக்கு கொரோனா பாசிட்டிவ் என அறிந்த ஒரு பெண் பொது இடத்தில் கதறி அழுத வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இது பலரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

பீஜிங்கின் வணிக வளாகம் ஒன்றில் நின்றுகொண்டிருக்கும் பெண்ணுக்கு வந்த தொலைபேசி அழைப்பில் '' உங்களுக்கு கொரோனா பாசிட்டிவ்'' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைக் கேட்டதும் அப்பெண் அலறிக்கொண்டே அழுகிறார். இதனைக்கண்ட அருகில் இருப்பவர்கள் அந்தப்பெண்ணின் நிலமையைப் புரிந்துகொண்டு அங்கிருந்து விலகிச் செல்கின்றனர். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. மற்றொரு சிசிடிவி காட்சியில் வணிக வளாகத்தின் வெளியே அந்தப் பெண் அமர்ந்திருக்கிறார்.

அப்போது ஆம்புலன்சில் வரும் சுகாதார ஊழியர் ஒருவர் அந்தப்பெண்ணை அங்கிருந்து அழைத்துச் செல்கிறார். இந்த வீடியோவும் இணையத்தில் பரவி வருகிறது. இந்த வீடியோக்களை பகிரும் பலரும் அந்தப்பெண் விரைவில் குணமடைய வேண்டுமென்றும், கொரோனா பாதிக்கப்பட்டாலும் மனத்திடத்துடன் அதனை எதிர்கொண்டு வெற்றி பெற வேண்டுமென்றும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com