18 ஆயிரம் அடி உயரத்தில் விமானத்திலேயே பிறந்த குழந்தை ... புதுமையான பெயர் வைத்த பெற்றோர்

18 ஆயிரம் அடி உயரத்தில் விமானத்திலேயே பிறந்த குழந்தை ... புதுமையான பெயர் வைத்த பெற்றோர்
18 ஆயிரம் அடி உயரத்தில் விமானத்திலேயே பிறந்த குழந்தை ... புதுமையான பெயர் வைத்த பெற்றோர்

அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணத்தில் கிளனல்லன் என்ற பகுதியில் ஒரு சமூகத்தினர் முகாம் அமைத்து வாழ்ந்துவருகின்றனர்.
கிளன் மற்றும் ரிச்சர்ட்சன் நெடுஞ்சாலையில் அதுவொரு மோட்டார் வாகனங்களுக்கான மையமாக திகழ்ந்துவருகிறது. அண்மையில் இந்தப் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு விமானத்திலேயே ஆண் குழந்தை பிறந்துள்ளது.

கிளனல்லன் பகுதியில் இருந்து மருத்துவமனைக்கு விமானத்தில் புறப்பட்ட ஒரு மணி நேரத்திலேயே கிரைஸ்டல் ஹிக்ஸ் என்ற அந்தப் பெண்மணிக்கு குழந்தை பிறந்தது. அது வித்தியாசமான முதல் அனுபவம் என்பதால், அந்தக் குழந்தைக்கு ஸ்கை என்று பெயரிட்டு மகிழ்ந்தனர்.

பின்னர் தாயும் சேயும் மருத்துவமனையில் பாதுகாப்பாக அனுமதிக்கப்பட்டனர். குறைமாதத்தில் குழந்தை பிறந்துள்ளதால், அதற்கு சுவாசக்கருவி பொருத்தியுள்ளனர். மேலும், பிறப்புச் சான்றிதழை நிரப்புவது கடினம் என்று அந்த தாய் நகைச்சுவையுடன் கூறியுள்ளார். ஏனெனில் பூமியில் இருந்து 18 ஆயிரம் அடி உயரத்தில் அவருக்கு குழந்தை பிறந்தது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com