உலகம்
தொலைத்தார் மாமியார், எடுத்தார் மருமகள்: 13 வருட மோதிர கதை!
தொலைத்தார் மாமியார், எடுத்தார் மருமகள்: 13 வருட மோதிர கதை!
13 வருடத்துக்கு முன் காணாமல் போன வைர மோதிரம் தொலைத்தவருக்கே, மீண்டும் கிடைத்த அதிசயம் கனடாவில் நடந்திருக்கிறது.
கனடாவின் ஆல்பர்டா மாகாணத்தைச் சேர்ந்தவர், மேரி கிராம்ஸ். வயது 84. இவர் தங்கள் தோட்டத்தில் களையெடுத்துக் கொண்டிருந்த போது, திருமண மோதிரத்தைத் தொலைத்துவிட்டார். இது வைர மோதிரம். இந்த சம்பவம் நடந்தது, கடந்த 2004 ஆம் ஆண்டு. இந்நிலையில் மேரியின் மருமகள் கூலன் டேலி, கடந்த திங்கள்கிழமை சமைப்பதற்காக சில கேரட்களை பிடுங்கினார். அப்போது ஒரு கேரட்டின் நடுவில் மின்னியபடி இருந்தது ஒரு மோதிரம். இதைக் கண்டு ஆச்சரியமடைந்த டேலி, இதை மாமியாரிடம் சொன்னார். மேரிக்கு மகிழ்ச்சி. காரணம் அதுதான் 13 வருடத்துக்கு முன் காணாமல் போன மேரியின் திருமண மோதிரம். தொலைத்தது நான் என்றாலும் என் மருகளுக்கு அது கிடைத்திருக்கிறது என்று மகிழ்ச்சி தெரிவித்திருக்கிறார் மேரி.