பிரேஸ்லேட்டை தொட்டுப்பார்த்ததால் வினை... ரூ.28 லட்சம் கேட்கும் நகைக்கடை!

பிரேஸ்லேட்டை தொட்டுப்பார்த்ததால் வினை... ரூ.28 லட்சம் கேட்கும் நகைக்கடை!

பிரேஸ்லேட்டை தொட்டுப்பார்த்ததால் வினை... ரூ.28 லட்சம் கேட்கும் நகைக்கடை!
Published on

"பொருட்கள் உடைந்தால் அது உங்களின் பொறுப்பு" என கடைகளில் எழுதி வைத்திருப்பதை நீங்கள் பார்த்திருக்கக் கூடும். அதுபோன்று கடையில், தன்னால் உடைக்கப்பட்ட பிரேஸ்லேட் விலையை பார்த்ததும் அதிர்ச்சியடைந்த ஒரு பெண் மயக்கம் போட்ட சம்பவம் அரங்கேறியுள்ளது.

சீனாவின் யுனான் மாகாணத்தில் உள்ள நகைக்கடை ஒன்றிற்கு பெண் ஒருவர் நகை வாங்கச் சென்றிருக்கிறார். அப்போது, வரிசையாக அடுக்கப்பட்டிருந்த நகைகளை ஒவ்வொன்றாக அவர் பார்த்து ரசித்திருக்கிறார். அப்போது கண்ணுக்கு மிகவும் அழகான பிரேஸ்லெட் ஒன்று தென்பட்டுள்ளது. அதனை கையில் எடுத்து அந்தப்பெண் பார்த்த போது, எதிர்பாராதவிதமாக அந்த பிரேஸ்லேட் கீழே விழுந்து உடைந்து விட்டது. உடனே கீழே விழுந்த பிரேஸ்லேட்டின் விலையை பார்த்திருக்கிறார். அதில் 44,110 டாலர் என எழுதப்பட்டிருந்தது. அப்படியென்றால் இந்திய மதிப்பில் இதன் விலை சுமார் 28 லட்சம். இதனால் அதிர்ச்சி அடைந்த பெண், நம்மிடம் பணம் வாங்காமல் விட மாட்டார்களே..? என்ற பீதியில் மயக்கம் வந்து கீழே சரிந்திருக்கிறார். உடடினயாக அந்தப் பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதன்பின்னரே பிரேஸ்லெட்டின் நியாபகம் வந்திருக்கிறது.

இதுகுறித்து அக்கடையின் உரிமையாளர் கூறும்போது, அந்தப் பெண் குடும்பத்தாரின் வருமானத்திற்கு ஏற்றதொகையை பெரும்பொருட்டு பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது எனத் தெரிவித்தார். கடைக்கு போகும் போது பொருட்கள் வாங்குகிறோமோ இல்லையோ கண்ட இடத்தில் கைவைத்து சிக்கலில் சிக்காமல் இருந்தால் சரிதான்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com