பார்க்கிங் கட்டணத்தை வசூலிக்க படாதபாடு பட்ட ஊழியர் - வைரலாகும் வீடியோ

பார்க்கிங் கட்டணத்தை வசூலிக்க படாதபாடு பட்ட ஊழியர் - வைரலாகும் வீடியோ

பார்க்கிங் கட்டணத்தை வசூலிக்க படாதபாடு பட்ட ஊழியர் - வைரலாகும் வீடியோ
Published on

துபாயில் பார்க்கிங் கட்டணத்தை கொடுக்காததால் காரின் முன்புறம் அமர்ந்து பார்க்கிங் ஊழியர் ஒருவர் காரை வழிமறிக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 

அல் சஃபோ துபாய் மரினா என்ற சாலையில் பெண் ஒருவர் காரை சிக்னலில் நிறுத்தியிருந்தார். அப்போது அங்கு வந்த பார்க்கிங் ஊழியர் ஒருவர் காரின் முன்புறம் ஏறி அமர்ந்து கொண்டார். இதையடுத்து அப்பெண் காரை விட்டுவிட்டு நகர்த்தி பார்க்கிங் ஊழியரை கீழே தள்ளினார். ஆனால் கீழே விழுந்து எழுந்த பார்க்கிங் ஊழியர் மீண்டும் காரில் முன்புறம் ஏறி கொண்டு காரை வழிமறித்தார். 

இதைப்பார்த்த அதே சிக்னலின் மறுபுறம் நின்று கொண்டிருந்த ஒருவர் அந்தக் காட்சியை தனது மொபைலில் வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பரவ செய்துள்ளார். இதையடுத்து பொதுமக்களுக்கு இடையூறு செய்யும் வகையில் இருந்ததால் துபாய் போலீசார் சம்பந்தபட்டவர்களை கண்டுபிடித்து விசாரணை நடத்தினர். 

விசாரணையில், அப்பெண் காரை பார்க்கிங் செய்து விட்டு அதற்கான பார்க்கிங் கார்டை கொடுக்காமல் சென்றுவிட்டதாகவும் அதனால் தான் காரை வழிமறிக்க அவ்வாறு செய்தேன் எனவும் பார்க்கிங் ஊழியர் விளக்கம் அளித்துள்ளார். மேலும் அப்பெண்ணிடம் விசாரணை நடத்தியபோது தான் சரியான பார்க்கிங் கார்டையே அளித்ததாக தெரிவித்தார். 

இதைத்தொடர்ந்து பொதுமக்களுக்கு இடையூறு செய்யும் வகையில் இனி இதுபோன்று செய்யக்கூடாது எனவும் மீறினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் போலீசார் எச்சரிக்கை செய்து அவர்களை அனுப்பி வைத்தனர். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com