திகிலூட்டும் ஜாம்பி மேக்-அப்பில் விற்பனை... இணையத்தில் வைரலான பெண்

திகிலூட்டும் ஜாம்பி மேக்-அப்பில் விற்பனை... இணையத்தில் வைரலான பெண்
திகிலூட்டும் ஜாம்பி மேக்-அப்பில் விற்பனை... இணையத்தில் வைரலான பெண்

தாய்லாந்தைச் சேர்ந்த ஆன்லைன் விற்பனையாளரான கனித்தா தாங்னாக், இறந்தவர்களின் உடையை விற்பனை செய்ய ஜாம்பிபோல் மேக்-அப் மற்றும் உடை அணிந்துகொண்டு வெர்சுவல் ஆடை விற்கும் தொழிலில் இறங்கியிருக்கிறார். இவருடைய மேக்-அப் மற்றும் உடைக்காகவே சமூக ஊடகங்களில் ஆயிரக்கணக்கான பேர் இந்த நிகழ்ச்சியைப் பார்த்துவருகின்றனர்.

32 வயதான கனித்தா, பயமுறுத்தும் இந்த மேக்-அப்பைப் போட தினமும் 3 மணிநேரம் செலவிடுவதாக ராய்ட்டர்ஸுக்கு கொடுத்த பேட்டியில் தெரிவித்திருக்கிறார். இரவு ஒளிப்பரப்பாகும் இந்த நிகழ்ச்சியில் ஒவ்வொரு உடையை காண்பிக்கும்போதும் அந்த உடைக்கு சொந்தக்காரர் எப்படி இறந்தார் என்பது பற்றிய பின்னணியையும் கூறுகிறார்.

இதில் பிராண்டாட் பொருட்கள்முதல், வெறும் 3.2 டாலர் மதிப்பிலான பொருட்கள்வரை அனைத்தையும் விற்பனை செய்கிறார். ஒருவர் இறந்தபிறகு அவரின் ஆடைகளை எரித்ததைப் பார்த்ததிலிருந்துதான் இந்த ஐடியா தனக்கு கிடைத்ததாகக் கூறியிருக்கிறார்.

இறந்தவர்களுக்கான பிரார்த்தனைகள் ஏறெடுக்கப்பட்டபின், அடக்கம் செய்பவர்களிடமிருந்து அந்த ஆடைகளைப் பெற்றுக்கொள்ளும் கனித்தா, தனது வருமானத்தில் ஒரு பகுதியை புத்தக் கோயில்களுக்கு நன்கொடையாகக் கொடுக்கிறார். அவர் அணிந்திருக்கும் உடைகள்கூட இதுபோன்று வாங்கப்பட்டவைதான் என்றும், அவற்றை அணியும்போது எந்த வித்தியாசமும் தெரிவதில்லை என்றும் அவர் கூறுகிறார். ஆடைகள் தவிர, ஜாம்பி போன்ற சில திகிலூட்டும் கைவினைப் பொருட்களையும் விற்பனை செய்கிறார் கனித்தா.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com