6வது மாடியில் விபரீத ‘யோகா’ பயிற்சி - 80 அடி கீழே தவறிவிழுந்த மாணவி
மெக்ஸிகோவைச் சேர்ந்த மாணவி ஒருவர் ஆறாவது மாடியின் பால்கனியில் விபரீதமாக யோகா பயிற்சி மேற்கொண்ட போது கீழே தவறி விழுந்துள்ளார்.
மெக்ஸிகன் கல்லூரியில் படிக்கும் மாணவி அலெக்ஸா டெர்ரஷாஸ். இவர் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றின் ஆறாவது மாடியில் வசித்து வருகிறார். இவர் தன்னுடைய வீட்டின் பால்கனியில் இருந்து யோகா பயிற்சி மேற்கொண்டார். பால்கனியின் வெளிப்புற கம்பியில் தலைகீழாக நின்று யோகா செய்துள்ளார்.
பின்னர், பால்கனியில் இருந்து அவர் கீழே தவறி விழுந்துள்ளார். சுமார் 80 கீழே சென்று தரையில் வீழ்ந்துள்ளார். உடனடியாக அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு அவருக்கு 11 மணி நேரம் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அவரது கைகள் மற்றும் கால்கள் பலத்த காயம் அடைந்துள்ளது.
அலெக்ஸா தவறி கீழே வீழ்வதற்கு முன்பு அவர் தலைகீழாக யோகா செய்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக பகிரப்பட்டு வந்துள்ளது.