தென் ஆப்பிரிக்காவின் கேப் டவுன் நகர மக்கள் குடிநீர் தட்டுப்பாட்டால் அவதிப்பட்டு வருகின்றனர்.
சுற்றுலா பயணிகள் அதிகம் வருகை தரும் நகரங்களில் ஒன்றான கேப் டவுனில் புத்தாண்டு தொடங்கியது முதலே குடிநீர் தட்டுப்பாடு நிலவிவருகிறது. மக்கள் சாலைகளில் நீண்ட வரிசையில் நின்று குடிநீர் வாங்கிச் செல்லும் அவலநிலை ஏற்பட்டுள்ளது. நபர் ஒருவருக்கு 25 லிட்டர் குடிநீர் என கேப்டவுன் மாநகராட்சி விநியோகம் செய்கிறது. தண்ணீர் தட்டுப்பாடுக் காரணமாக நாள் ஒன்றுக்கு 87 லிட்டர் மேல் பயன்படுத்தக் கூடாது என்ற கட்டுப்பாடும் விதிக்கப்பட்டுள்ளது.
நகரின் பல்வேறு பகுதிகளில் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்துவது குறித்து விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன. போதிய மழை இல்லாத காரணத்தால் அணைகளில் நீர்வரத்து குறைந்துள்ளது. வரும் ஏப்ரல் மாதம் இறுதியில் தண்ணீர் இல்லாத நகரமாக கேப் டவுன் மாறும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.