
கொரோனா தொற்றினால் பாதிக்கபட்டிருக்கும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் விரைவில் குணம்பெற வேண்டுகிறேன் என்று பிரதமர் மோடி டிவீட் செய்துள்ளார்.
இது தொடர்பாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில் “ எனது நண்பரான அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் அவரது மெலனியா டிரம்ப் ஆகியோர் விரைவில் குணம்பெறவும்,நல்ல உடல்நலத்துடன் இருக்கவும் வேண்டுகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
ட்ரம்புக்கும் அவரது மனைவியான மெலனியாவிற்கும் கொரோனாத் தொற்று உறுதியாகியுள்ளதாக ட்ரம்பின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் செய்தி வெளியாகியுள்ளது. இது தொடர்பாக டிரம்பின் டிவிட்டர் பதிவில் “ இன்று எனக்கும் எனது மனைவிக்கும் கொரோனாத்தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. நாங்கள் எங்களுக்கான தனிமைப்படுத்துதல் மற்றும் சிகிச்சையை உடனடியாக தொடங்குகிறோம். இருவரும் இணைந்து இதனை எதிர்கொள்வோம்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.