\
நியூயார்க் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கடும் பனிப்பொழிவு

நியூயார்க் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கடும் பனிப்பொழிவு

நியூயார்க் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கடும் பனிப்பொழிவு
Published on: 

அமெரிக்காவில் நியூயார்க் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கடுமையான பனிப்பொழிவு நிலவுகிறது.

இதனால் சாலைகளில் இரண்டு அடி அளவுக்கு பனி படர்ந்து காணப்படுகிறது. வீடுகள், மரங்கள், சாலையில் நிறுத்தப்பட்டுள்ள கார்கள் என அனைத்தும் பனி படர்ந்து வெள்ளிப் போர்வையை போர்த்தியது போல காட்சி அளிக்கின்றன. சாலைகளில் எதிரே வருபவர்கள் தெரியாத அளவுக்கு தொடர்ந்து பனிப்பொழிவு இருந்து வருகிறது.

மக்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில், பனியை அப்புறப்படுத்தும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. பனிப்பொழிவுடன் காற்றும் வீசுவதால் நிலவும் கடுமையான குளிரால் மக்கள் பெரும் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com