கோலாகலமாகத் தொடங்கிய குளிர்கால ஒலிம்பிக்!

கோலாகலமாகத் தொடங்கிய குளிர்கால ஒலிம்பிக்!
கோலாகலமாகத் தொடங்கிய குளிர்கால ஒலிம்பிக்!

தென் கொரியாவின் பியாங்சாங் நகரில் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் வண்ணமயமாகத் தொடங்கின. 

குளிர்கால ஒலிம்பிக்கின் தொடக்க விழாவின்போது, தென் கொரிய வீரர்களும், வடகொரிய வீரர்களும் ஒருங்கிணைந்த ஒரே கொடியின்கீழ் அணிவகுத்துச் சென்றனர். இந்த போட்டிகளையொட்டி, தென்கொரியாவுக்கும் வடகொரியாவுக்கும் இடையே அரசியல் ரீதியான பேச்சுகளும் நடக்க இருக்கின்றன. முன்னதாக நல்லெண்ண அடிப்படையில் தென்கொரியா சென்ற வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்னின் சகோதரி கிம் யோ ஜோங், அமெரிக்கத் துணை அதிபர் மைக் பென்ஸுக்கு அருகே அமர்ந்து தொடக்கவிழாவைப் பார்த்தார். உலக நாடுகளின் கவனத்தை இந்நிகழ்ச்சி ஈர்த்துள்ளது.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com