வின்ஸ்டன் சர்ச்சில் வரைந்த பிரபல ஓவியத்தை ரூ.84 கோடிக்கு விற்ற ஏஞ்சலீனா ஜோலி!

வின்ஸ்டன் சர்ச்சில் வரைந்த பிரபல ஓவியத்தை ரூ.84 கோடிக்கு விற்ற ஏஞ்சலீனா ஜோலி!

வின்ஸ்டன் சர்ச்சில் வரைந்த பிரபல ஓவியத்தை ரூ.84 கோடிக்கு விற்ற ஏஞ்சலீனா ஜோலி!
Published on

இங்கிலாந்து நாட்டின் முன்னாள் பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சில் வரைந்த ஓவியத்தை ரூ.84 கோடிக்கு விற்றுள்ளார் பிரபல ஹாலிவுட் நடிகை ஏஞ்சலீனா ஜோலி.

இரண்டாம் உலகப் போரின்போது இங்கிலாந்தின் பிரதமராக இருந்தவர் வின்ஸ்டன் சர்ச்சில். அவர் நல்ல ஓவியரும் கூட. அப்போது அவர் வரைந்த மொரோகா நாடு குறித்த ஓவியம் மிகப் பிரபலம். அந்த ஓவியம் பல முறை ஏலத்துக்கு வந்தது. அதனை உலகின் பல பெரிய மனிதர்கள் அதிக தொகை குறித்து ஏலம் எடுத்தனர்.

இந்நிலையில் அந்த பிரபலமான ஓவியத்தை பிரபல ஹாலிவுட் நடிகையான ஏஞ்சலீனா ஜோலி பல ஆண்டுகளுக்கு முன்பு வாங்கியிருந்தார். இப்போது அந்த ஓவியத்தை ரூ.84 கோடிக்கு விற்றுள்ளார் அவர். வின்ஸ்ட்ன் சர்ச்சிலின் மொரோகா ஓவியத்தை இப்போது ஏன் அவர் விற்றார் என்ற விவரம் தெரியவரவில்லை.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com