\
Ukraine claims to have taken out more than half of Russias oil product
Putin & ZelenskyReuters

உக்ரைனை விட்டுக்கொடுக்கிறாரா ஜெலென்ஸ்கி? போரில் புதிய திருப்பம்!

ஜெலென்ஸ்கியின் உறுதி: ரஷ்யா ஆக்கிரமித்த நிலப்பகுதிகளை அங்கீகரிக்க மாட்டோம்!
Published on: 
Summary

உக்ரைன்-ரஷ்யா போரை முடிவுக்குக் கொண்டுவர நவம்பரில் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. நிலப்பகுதிகளை ஒப்படைக்குமா என்ற கேள்வி எழுந்த நிலையில், ஜெலென்ஸ்கி ரஷ்யா ஆக்கிரமித்த பகுதிகளை அங்கீகரிக்க மாட்டோம் என உறுதியாக கூறியுள்ளார். பாதுகாப்பு உத்தரவாதங்கள் கிடைத்தால், தற்காலிக சண்டை நிறுத்தம் ஏற்படும் என அவர் தெரிவித்தார்.

செய்தியாளர் - M.மீரா

ரஷ்யா – உக்ரைன் இடையிலான போரை முடிவுக்குக் கொண்டுவர புதிய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, அமெரிக்கா, ரஷ்யா மற்றும் உக்ரைன் ஆகிய மூன்று நாடுகளின் பிரதிநிதிகள் நவம்பர் மாதம் முத்தரப்பு பேச்சுவார்த்தையில் பங்கேற்க உள்ளதாக உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார். இந்தப் பேச்சுவார்த்தையில் உக்ரைன் தனது நிலப்பகுதிகளை ரஷ்யாவிடம் ஒப்படைக்குமா என்ற கேள்வியும் சர்வதேச அளவில் எழுந்துள்ளது.

அக்டோபர் 25-ம் தேதி உக்ரைன் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் பேசிய ஜெலென்ஸ்கி, அமெரிக்கா, ரஷ்யா, உக்ரைன் ஆகிய நாடுகளின் பேச்சுவார்த்தைக் குழுக்கள் நவம்பரில் சந்திக்கத் திட்டமிட்டுள்ளதாகக் கூறினார்.

Ukraine war
Ukraine war Reuters

இந்தப் பேச்சுவார்த்தையில் ஐரோப்பிய நாடுகளும் பங்கேற்க வேண்டும் என்பது உக்ரைனின் விருப்பம் என்றும், இதன் மூலம் மூன்று நாட்டுத் தலைவர்களும் நேரடியாகச் சந்திப்பதற்கான வாய்ப்பு உருவாகும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

மேலும், எரிசக்தி கட்டமைப்புகள் மீதான தாக்குதல்களை நிறுத்துவது, கடல் வழித் தாக்குதல்களைத் தடுப்பது, தானிய ஏற்றுமதியைத் தொடர்வது மற்றும் போர்க் கைதிகளைப் பரிமாறிக் கொள்வது போன்ற விவகாரங்கள் பேச்சுவார்த்தையில் இடம்பெறலாம் என்றும் கூறினார்.

நிலப்பகுதிகளை விட்டுக்கொடுக்குமா உக்ரைன்?

போரை உடனடியாக முடிவுக்குக் கொண்டு வரவும், மக்களின் உயிரைக் காக்கவும் தற்போதைய போர் முனைகளிலேயே (Front lines) சண்டையை தற்காலிகமாக நிறுத்தி வைக்கும் "பிரீஸ்" (Freeze) திட்டத்திற்கு அவர் சம்மதம் தெரிவித்துள்ளார். ஆனால், ரஷ்யா ஆக்கிரமித்துள்ள பகுதிகளை ரஷ்யாவின் நிலமாக அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்க மாட்டோம் என்பதில் அவர் உறுதியாக உள்ளார்.

Ukraine war
Ukraine war reuters

சண்டை நிறுத்தத்திற்கு ஒப்புக்கொள்ள வேண்டுமானால், உக்ரைனின் எஞ்சிய பகுதிகளுக்கு அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளிடமிருந்து வலுவான பாதுகாப்பு உத்தரவாதங்கள் (Security guarantees) கிடைக்க வேண்டும் என்பதை முதன்மை நிபந்தனையாக அவர் வைத்துள்ளார்.

தற்காலிகமாகப் போரை நிறுத்திவிட்டு, பின்னர் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளை ராஜதந்திர (Diplomatic) பேச்சுவார்த்தைகள் மூலம் மீட்டெடுக்க முடியும் என்று உக்ரைன் நம்புகிறது.

Ukraine claims to have taken out more than half of Russias oil product
2 கண்ணிவெடிகளில் சிக்கிய 27 இந்தியர்கள்..? ஹார்முஸில் நடந்த பயங்கரம்!