'இது ஒன்னும் புதுசு இல்ல' 10 வருஷத்துக்கு முன்பே அறைந்த வில் ஸ்மித்!

'இது ஒன்னும் புதுசு இல்ல' 10 வருஷத்துக்கு முன்பே அறைந்த வில் ஸ்மித்!
'இது ஒன்னும் புதுசு இல்ல' 10 வருஷத்துக்கு முன்பே அறைந்த வில் ஸ்மித்!

மனைவியை கேலி செய்த நடிகரை கன்னத்தில் அறைந்த வில் ஸ்மித், இதற்கு முன்னதாக செய்தியாளர் ஒருவரையும் கன்னத்தில் அறைந்த வீடியோ தற்போது அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில், தனது மனைவி குறித்து கேலியாக பேசியதற்காக நிகழ்ச்சி தொகுப்பாளர் கிறிஸ் ராக்கை ஹாலிவுட் நடிகர் வில் ஸ்மித் கன்னத்தில் அறைந்தார், இந்த சம்பவத்தின் வீடியோ உலகம் முழுவதும் பெரும் வைரலானது. இதனைத் தொடர்ந்து, தனது செயலுக்காக கிறிஸ் ராக்கிடம் மன்னிப்பு கேட்பதாக வில் ஸ்மித் அறிவித்தார்.



இந்நிலையில், கடந்த 2012ஆம் ஆண்டு, ரஷ்யாவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் வில் ஸ்மித் கலந்து கொண்டுள்ளார். அப்போது, செய்தியாளர் ஒருவர் வில் ஸ்மித்தை கட்டி அணைத்துக் கொண்டு முத்தம் கொடுக்க முயன்ற போது, வில் ஸ்மித் தள்ளிவிட்டு, கன்னத்தில் அறைந்துள்ளார். இதனால் பொது இடத்தில் ஒருவரை கன்னத்தில் அறைவது வில் ஸ்மித்திற்கு புதிதல்ல என நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.







Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com