பாகிஸ்தான் - சவுதி அரேபியா போர் ஒப்பந்தம்
பாகிஸ்தான் - சவுதி அரேபியா போர் ஒப்பந்தம்web

பாகிஸ்தான்-சவுதி அரேபியா ஒப்பந்தம்| இந்தியாவிற்கு தாக்கம் ஏற்படுத்துமா? ஆராயும் வெளியுறவு அமைச்சகம்!

பாகிஸ்தானும் சவுதி அரேபியாவும் செய்துகொண்டுள்ள ஒப்பந்தம் இந்தியாவின் பாதுகாப்பில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என ஆராய உள்ளதாக வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
Published on

இரு நாடுகளில் எது தாக்கப்பட்டாலும் பரஸ்பரம் மற்ற நாடு உதவிக்கு வர வேண்டும் என பாகிஸ்தானும் சவுதி அரேபியாவும் செய்துகொண்டுள்ள ஒப்பந்தம் உலகளவில் கவனத்தை ஈர்த்துள்ளது.

பாகிஸ்தான் - சவுதி ஒப்பந்தம் இந்தியாவிற்கு பாதிப்பா?

கத்தாரை அண்மையில் இஸ்ரேல் தாக்கியது அரபு நாடுகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் இந்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் இஸ்ரேல் தாக்குதலில் இருந்து தற்காத்துக்கொள்ள அணுஆயுத திறன்கொண்ட பாகிஸ்தானுடன் சவுதி அரேபியா ஒப்பந்தம் செய்துகொண்டுள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கெனவே சவுதி அரேபியாவுக்கு அமெரிக்கா பாதுகாப்பு அளித்துவந்தாலும் அதையும்தாண்டி பாகிஸ்தானுடன் ஒப்பந்தம் செய்துகொண்டுள்ளதும் கவனிக்கத்தக்க அம்சமாக உள்ளது. எனினும் பாகிஸ்தானுக்கும் இந்தியாவுக்கும் மோதல்போக்கு உள்ள நிலையில் அந்த கோணத்திலும் இந்த ஒப்பந்தம் முக்கியத்துவம் பெறுகிறது.

பாகிஸ்தான் - சவுதி அரேபியா போர் ஒப்பந்தம்
பாகிஸ்தான் - சவுதி அரேபியா போர் ஒப்பந்தம்

இதற்கிடையே இந்த ஒப்பந்தம் நம் நாட்டு பாதுகாப்பு, பிராந்திய பாதுகாப்பு, சர்வதேச பாதுகாப்பில் ஏற்படுத்த வாய்ப்புள்ள தாக்கங்கள் குறித்து விரிவாக ஆய்வு செய்யப்படும் என்றும் எந்த சூழலிலும் நமது நாட்டின் பாதுகாப்பில் சமரசம் இருக்காது என்றும் வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் தெரிவித்துள்ளார். முன்னதாக அரபு, இஸ்லாமிய கூட்டமைப்பில் உள்ள 40 நாடுகளும் இணைந்து நேட்டோ பாணியில் கூட்டுப்படையை உருவாக்க வேண்டும் என பாகிஸ்தான் போன்ற நாடுகள் குரல் எழுப்பியிருந்தன.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com