\
''தாயிடம் ஆசி பெற குஜராத் செல்கிறேன்'' - பிரதமர் மோடி

''தாயிடம் ஆசி பெற குஜராத் செல்கிறேன்'' - பிரதமர் மோடி

''தாயிடம் ஆசி பெற குஜராத் செல்கிறேன்'' - பிரதமர் மோடி
Published on

நாளை மாலை குஜராத் சென்று தனது தாயிடம் ஆசி பெறவுள்ளதாக பிரதமர் மோடி ட்விட்டரில் தெரிவித்துள்ளார்

மக்களவைத் தேர்தலில் பாஜக கூட்டணி 350 இடங்களில் அபார வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்துள்ளது. பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி 3 லட்சத்து 85 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இதைத்தொடர்ந்து ‌இரண்டாவது முறையாக வரும் 30 ஆம் தேதி நரேந்திர மோடி பதவியேற்பார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில் நாளை மாலை குஜராத் சென்று தனது தாயிடம் ஆசி பெறவுள்ளதாக பிரதமர் மோடி ட்விட்டரில் தெரிவித்துள்ளார். இது குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், '' நாளை மாலை குஜராத் சென்று எனது தாயிடம் ஆசி பெறவுள்ளேன். நாளை மறுநாள் காலை என் மீது நம்பிக்கை வைத்த மக்களுக்கு நன்றி சொல்ல வாரணாசி செல்கிறேன் என்று தெரிவித்துள்ளார்

இதற்கிடையே டெல்லியில் பாஜக கூட்டணி தலைவர்களின் ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற உள்ளது. வரும் 30ஆம் தேதி பிரதமர் மோடி பதவி ஏற்க இருக்கும் நிலையில் புதிய அமைச்சரவை குறித்து விவாதிக்க கூட்டணி கட்சித் தலைவர்களுக்கு பாரதிய ஜனதா அழைப்பு விடுத்திருக்கிறது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com