”கூகுளில் இதத்தான் இலங்கை மக்கள் தேடித்தேடி பார்த்திருக்காங்களாம்” - எது தெரியுமா?

”கூகுளில் இதத்தான் இலங்கை மக்கள் தேடித்தேடி பார்த்திருக்காங்களாம்” - எது தெரியுமா?
”கூகுளில் இதத்தான் இலங்கை மக்கள் தேடித்தேடி பார்த்திருக்காங்களாம்” - எது தெரியுமா?

கூகுளில் SEX என்ற சொல்லை இலங்கையில் வடமத்திய மாகாணத்தில் கடந்த 12 மாதங்களில் தேடியுள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியிருக்கிறது.

இலங்கையில் கடந்த 8 மாதங்களாக தொடரும் கடும் பொருளாதார நெருக்கடியால் அந்நாட்டு மக்கள் அன்றாட உணவிற்கும், அத்தியாவாசியப் பொருள்கள், மருந்து உள்ளிட்டவைகளுக்காக அவதியுற்று வரும் நிலையில் இனி வாழ முடியாது என்ற நோக்கில் உறவுகளை பிரிந்து உடமைகளை இழந்து பல ஆயிரக்கணக்கானோர் குடும்பம், குடும்பமாக கனடா மற்றும் தமிழகத்திற்கும் அகதிகளாக தஞ்சம் அடைந்து வருகின்றனர்.

இப்படி இருக்கையில், “SEX” என்ற சொல்லை அதிகளவாக கூகுள் தளத்தில் தேடிய நாடுகள் பட்டியலில் இலங்கை முதல் இடத்தில் உள்ளதாக GOOGLE நிறுவனத்தின் அண்மையில் தெரிவித்துள்ளது. குறிப்பாக கடந்த 12 மாதங்களில் SEX என்ற சொல்லை கூகுளில் இலங்கையிலேயே அதிகளவில் தேடியிருக்கிறார்களாம்.

இலங்கையில் வடமத்திய மாகாணத்தில் அனுராதபுரம் பொலநர்வே ஆகிய இரண்டு மாவட்டங்களை உள்ளடக்கிய அனுராதபுரம், ஹினியா, வவுனியா, தம்புள்ளே, உள்ளிட்ட பகுதிகள் அடங்கியுள்ளது. இலங்கையில் வட மத்திய மாகாணத்தில் குறிப்பிட்ட இந்த பகுதிகளில் SEX என்ற சொல்லை கடந்த ஒரு வருட காலத்தில் அதிகளவில் தேடியுள்ளனர் என கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இது குறித்து இலங்கையிலுள்ள மனோதத்துவ மருத்துவர் கூறும் போது “அன்றாட பணி செய்பவர்கள் ஓய்வாக இருப்பது வேறு பணிகள் ஏதும் இல்லாமல் இருப்பது ஒரு மன அழுத்தத்தை ஏற்படுவதை தவிர்ப்பதற்காகக் கூட இந்த தேடுதல் இருப்பதாக புரிந்துகொள்ளலாம். அது மாத்திரம் இல்லாமல் ஒட்டுமொத்தமாக இணையத்தில் செக்ஸ் தொடர்பான தேடுதலை பார்க்கிறார்கள் என்பதை நாம் குற்றமாக சொல்ல முடியாது.

ஆகவே ஒவ்வொருவர்களின், சூழலுக்கு ஏற்றவாறு மனநிலை அமையும் ஏனெனில் மனசு என்பது மாறுதலுக்குட்பட்டது. இலங்கையை பொருத்தமாட்டிலும் இனம், மொழி வேறுபாடு இன்றி நடுத்தர வாசிகள் மாத்திரமே பொருளாதார நெருக்கடியால் அவதிப்பட்டு வருகிறார்கள். என்பதை நாம் இங்கு தெளிவாக காண முடிகிறது. ஆகவே அவர்களுக்கு இது ஒரு பொழுதுபோக்காகவோ அல்லது மனசை நீங்கள் குறிப்பிட்ட வலைதளத்தில் செலுத்தினால் அமைதிபெறும் என்ற நோக்கமாகக் கூட இருக்கலாம் ஆகவே எந்த ஒரு முடிவையும் நாம் ஒரு குற்றமாக கருத முடியாது.”

அதேபோல, ராமநாதபுரத்தில் மனோதத்துவ மருத்துவர் பெரியார் தாசனிடம் கேட்ட போது, “செக்ஸ் என்பது மனிதனுக்கு இயல்பாகவே ஒரு ஆர்வம் இருக்கும் என்பது உண்மை. இவை அவரவரின் மனநிலையை பொறுத்தது. அதேபோல நாம் உண்ணும் உணவு குடிநீர், இருப்பிடம் இதை சார்ந்ததாகவும் அமைந்துள்ளது. அதாவது ஒருவர் அன்றாட பணியில் இருக்கும் பொழுது அவருடைய மனநிலை அந்த பணியை சார்ந்ததாகவே இருக்கும். வேலையின்மை உணவு கிடைக்காமலும் அடிப்படையான தேவைகள் இல்லாமலும் இருக்கும்போது மனசு ஒருவித விரக்தியடைவதோடு அவை அலைபாயும்.

அவ்வாறான காலகட்டங்களில் இது அடிப்படையான ஒரு உணர்வாக இருப்பதால் இந்த தளத்தில் சிலவற்றை அறிந்து கொள்ள இருப்பிடத்திலேயே மிகவும் எளிதாக வெளியில் தேடி அலையாமல் கிடைக்கும் ஒரு வாய்ப்பாக இருப்பதால் இதை அவர்கள் விரும்பி பார்க்கலாம். அவ்வாறாகவே நாம் கருதலாம். மற்றபடி இது ஒரு மிகப்பெரிய ஒரு குற்றமாகவோ அல்லது மனசை இதற்கு அடிமைப்படுத்தி விட்டார்களோ என்பதை நாம் தெளிவாக சொல்ல முடியாது இது மனிதனுடைய இயல்பான ஒரு விஷயமாகவே நாம் கருத வேண்டும். ஆகவே இலங்கையில் ஏற்பட்டுள்ள தற்போதைய பொருளாதார நெருக்கடி நிலைக்கு மன அழுத்தம் குறைவதற்காக கூட இந்த தேடுதலை அதிகமாக தேடி இருக்கலாம் என்றே நாம் கருதலாம்.” எனக் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com