\
Why Is Reliance’s Jamnagar Refinery Important to the US?
Marco RubioPt web

ஜாம்நகர் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை.. அமெரிக்க அமைச்சர் நேரில் செல்லும் அளவுக்கு முக்கியத்துவம் என்ன?

அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் மார்கோ ரூபியோ குஜராத் மாநிலம் ஜாம்நகரில் உள்ள ரிலையன்ஸ் எண்ணெய் சுத்திகரிப்பாலைக்குச் சென்றுள்ளார். அமெரிக்க அமைச்சர் நேரில் செல்லும் அளவுக்கு அந்த ஆலையின் முக்கியத்துவம் என்ன?
Published on: 

குஜராத்தில் உள்ள சிறிய நகரமான ஜாம்நகர் உலகளவு எரிபொருள் தேவையை பூர்த்தி செய்வதில் முக்கியப் பங்கு வகிக்கிறது. இங்கிருந்து சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய் ஐரோப்பா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, பிற ஆசிய நாடுகள் என பல்வேறு பகுதிகளுக்கு அனுப்பப்படுகிறது. உலகிலேயே தனித்த மிகப் பெரிய எண்ணெய் சுத்தகரிப்பு வளாகம் எனற சிறப்பும் இதற்கு உண்டு. இங்கு தினசரி 14 லட்சம் பீப்பாய் எண்ணெய் சுத்திகரிக்கப்படுகிறது. அதிநவீனத் தொழில்நுட்பம் மூலம் கச்சா எண்ணெயிலிருந்து பெட்ரோல், டீசல் உள்ளிட்ட பெட்ரோலியப் பொருட்களாக மாற்றப்படுகின்றன. கச்சா எண்ணெய் உலகின் பல்வேறு நாடுகளில் கிடைத்தாலும் ஒவ்வொன்றும் ஒவ்வொரு தன்மை கொண்டதாக இருக்கும். அதாவது கந்தகத்தின் அளவு ஒன்றுக்கொன்று மாறுபடும். மேலும் எண்ணெய்யின் திரவத்தன்மையும் மாறுபடும்.

ஜாம்நகர் ஆலை
ஜாம்நகர் ஆலைRil.com

உதாரணமாக சவுதியில் கிடைக்கும் எண்ணெய் சமையல் எண்ணெய் போல் நீர்மத்தன்மை மிகுந்து இருக்கும் நிலையில், வெனிசுலாவில் கிடைக்கும் எண்ணெய் தாருக்கு இணையாகக் கெட்டித்தன்மை கொண்டதாக இருக்கும். உலகின் வெவ்வேறு பகுதிகளில் கிடைக்கும் 214 வகை எண்ணெய்களை சுத்திகரிக்கும் தொழில்நுட்பம் கொண்டது ஜாம்நகர் ஆலை. உலகின் வெகுசில ஆலைகள் மட்டுமே இத்தகைய திறனை கொண்டவை. அமெரிக்கா, ரஷ்யா, வெனிசுலா, மேற்காசிய நாடுகள் என உலகின் சுமார் 60 நாடுகளில் இருந்து ஜாம்நகர் ஆலைக்கு கச்சா எண்ணெய் வருகிறது. இவை சுத்திகரிக்கப்பட்டு பல்வேறு பெட்ரோலிய பொருட்களாக சுமார் 80 நாடுகளுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனர் திருபாய் அம்பானியால் மூன்றே ஆண்டுகளில் கட்டப்பட்ட இந்த ஆலை 1999ஆம் ஆண்டிலிருந்து செயல்பட்டு வருகிறது.

Why Is Reliance’s Jamnagar Refinery Important to the US?
விண்வெளிக்குச் செல்லும் முதல் பாகிஸ்தானியர்.. சீனாவுடன் இணைந்து புதிய மைல்கல்!
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com