\
Why Is China’s Great Wall Being Damaged?
சீனப் பெருஞ்சுவர்REUTERS

சேதமடையும் சீனப் பெருஞ்சுவர்.. சமூக ஆர்வலர்கள் கவலை!

சீனப் பெருஞ்சுவர் சேதமடைந்து வருவது அந்நாட்டு தலைவர்களை கவலையடையச் செய்திருக்கிறது. சேதத்துக்கான காரணம் என்ன தெரியுமா? இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
Published on: 

மங்கோலியா, மன்சூரியா உள்ளிட்ட அப்போதைய அண்டை நாடுகளின் படையெடுப்புகளில் இருந்து தற்காத்துக் கொள்வதற்காக சீனாவில் வடக்கு எல்லைப் பகுதியில் எழுப்பப்பட்ட சுவர்தான் இந்த சீனப் பெருஞ்சுவர். சுவர் பார்ப்பதற்கு ஒரே மாதிரியாக இருந்தாலும், சீனாவை ஆண்ட வெவ்வேறு மன்னர்களால் வெவ்வேறு காலகட்டங்களில் சுவரின் வெவ்வேறு பகுதிகள் கட்டப்பட்டன. கிறிஸ்து பிறப்பிற்கு முன் 7 ஆம் நூற்றாண்டிலேயே சீனப் பெருஞ்சுவரின் கட்டுமானப் பணிகள் தொடங்கியதாக சொல்லப்படும் நிலையில், 1368 காலகட்டத்தில் சீனாவை ஆண்ட மிங் வம்சத்தினர் சுவரை கற்களால் கட்டமைத்து முழு வடிவம் கொடுத்துள்ளனர்.

Why Is China’s Great Wall Being Damaged?
சீனப் பெருஞ்சுவர்REUTERS

இப்படி நூற்றாண்டுகளைக் கடந்து கட்டப்பட்ட இந்த சீனப் பெருஞ்சுவர் சுமார் 21 ஆயிரம் கிலோ மீட்டர் தூரத்துக்கும் அப்பால் பரந்து விரிந்து கிடக்கிறது. இந்த பெருஞ்சுவர் ஏற்கெனவே சில பகுதிகளில் தொடர்ச்சி விட்டுப் போய், சேதமடைந்திருப்பதாக சொல்லப்படும் நிலையில், தற்போது மேலும் சுவருக்கு பிரச்னை வந்திருப்பதாக சொல்கின்றனர். குவோஜியாயோ என்ற பகுதியில் இருக்கக் கூடிய பெருஞ்சுவர் கடந்த 20 ஆண்டுகளாக கொட்டப்பட்ட கழிவுகளால் கடுமையாக சேதமடைந்திருக்கிறதாம். அப்பகுதியில் ஏற்கெனவே சுவர் பகுதி சேதமடையத் தொடங்கியதாக சொல்லப்படும் நிலையில், உரிமம் பெறாமல் செயல்பட்டு வந்த நிங்வு சாவோகாய் என்ற நிலக்கரி நிறுவனம், தங்கள் சுரங்கப் பணியின்போது உருவாகும் கழிவுகளை பெருஞ்சுவரின் அந்த சேதமடைந்த பகுதியின் குறுக்கே பள்ளம் தோண்டி அங்கு கொட்டியதாக சொல்லப்படுகிறது.

இது தொடர்பாக பலமுறை அப்பகுதி சமூக ஆர்வலர்கள் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என உள்ளூர் செய்தி ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இதனால் பெருஞ்சுவரில் 19 அடி அகலத்துக்கு பெரிய இடைவெளி உருவாகியிருக்கிறதாம். இப்படி பெருஞ்சுவர் சேதமடைந்திருப்பது சீன மக்களையும், அந்நாட்டு தலைவர்களையும் கவலையடையச் செய்திருக்கிறது. நூற்றாண்டுகளைக் கடந்து நிமிர்ந்து நின்று அடுத்தடுத்த சந்ததிகளுக்கு கதை சொல்லும் வரலாற்றுச் சின்னங்களை பாதுகாப்பது காலத்தின் தேவை என்பதை மறுக்க முடியாது.

Why Is China’s Great Wall Being Damaged?
Most Wanted பட்டியல்.. இடம்பிடித்துள்ள இந்தியர்.. பரிசுத் தொகை அறிவித்துள்ள அமெரிக்கா!
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com