பிரிட்டனின் அடுத்த பிரதமர் யார்.? நாளை மறுநாள் தேர்தல் முடிவு.!
பிரிட்டனின் அடுத்த பிரதமர் யார் என்ற முடிவு நாளை மறுநாள் அறிவிக்கப்பட உள்ளது.
பிரிட்டனின் புதிய பிரதமரை தேர்வு செய்வதற்கான ஆளும் கன்சர்வேடிவ் கட்சிக்குள் நடந்த தேர்தல் நிறைவடைந்துள்ளது. இதைத் தொடர்ந்து நாளை மறுநாள் புதிய பிரதமரை பிரிட்டன் மகாராணி எலிசபெத் முறைப்படி அறிவிப்பார் என தகவல் வெளியாகியுள்ளது.
பிரிட்டன் பிரதமருக்கான போட்டியில் இந்திய வம்சாவளியை சேர்ந்த ரிஷி சுனக் மற்றும் லிஸ் ட்ரஸ் ஆகியோர் முன்னணியில் இருப்பதாக தெரியவந்துள்ளது. இவர்களில் வெற்றியாளர் யார் என்பதை நாளை மறுநாள் பிரிட்டன் மகாராணி எலிசபெத் முறைப்படி அறிவிப்பார். அதை தொடர்ந்து புதிய அமைச்சரவையை அமைப்பதற்கான பணிகள் தொடங்கும்.
இதற்கிடையே கருத்துக்கணிப்புகளில் வெளியுறவு செயலாளரான ட்ரஸ் வெற்றி பெறுவதற்கு அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. அவர் புதிய பிரதமரானால், வரி குறைப்பு தொடர்வான நடவடிக்கைகளை முன்னெடுப்பார் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.