உலகம்
ஜப்பானில் புதிய பிரதமராக பதவியேற்கப் போவது யார்?
ஜப்பானில் புதிய பிரதமராக பதவியேற்கப் போவது யார்?
ஜப்பானில் பிரதமர் பதவி வகிக்க வழி வகை செய்யும் ஆளுங்கட்சி தலைவர் பதவிக்கு முதன்முறையாக பெண் எம்பியான சனாயே டகாய்சி போட்டியிடுவதாக அறிவித்துள்ளார்.
தற்போதைய பிரதமரும், ஆளும் கட்சி தலைவருமான யோஷிஹைடு சுகா தனது பதவியை ராஜினாமா செய்யபோவதாக அறிவித்துள்ளார். எனவே யார் அந்த பதவிக்கு வரப் போகிறார்? பிரதமராக யார் தேர்வாகப் போகிறார் என எதிர்பார்ப்பு எழுந்துள்ள நிலையில் பெண் எம்பியான சனாயே டகாய்சி, கட்சித் தலைவர் பதவிக்கு போட்டியிடுவதாக அறிவித்துள்ளார். வரும் 29ஆம் தேதி இந்த போட்டியில் வெல்லப்போவது யார் என்பது தெரிய வரும்.