"கொரோனா முடிவுக்கு வர நீண்ட காலம் ஆகலாம்" - உலக சுகாதார அமைப்பு கணிப்பு

"கொரோனா முடிவுக்கு வர நீண்ட காலம் ஆகலாம்" - உலக சுகாதார அமைப்பு கணிப்பு

"கொரோனா முடிவுக்கு வர நீண்ட காலம் ஆகலாம்" - உலக சுகாதார அமைப்பு கணிப்பு
Published on

கொரோனா பரவல் குறித்த பல்வேறு குழப்பங்கள், அந்நோய்க்கான சிகிச்சையில் உள்ள சிக்கல்களை பார்க்கும்போது அது முடிவுக்கு வர நீண்ட காலம் ஆகும் என தோன்றுவதாக உலக சுகாதார அமைப்பின் இயக்குநர் டெட்ராஸ் அதனம் கெப்ரிசிஸ் தெரிவித்துள்ளார்.

சுவிட்சர்லாந்தின் ஜெனிவாவில் செய்தியாளர்களை சந்தித்த டெட்ராஸ் அதனம், பல்வேறு நாடுகளில் உள்ள மருத்துவமனைகளின் அவசர சிகிச்சை பிரிவுகள் கொரோனா நோயாளிகளால் நிரம்பி வழிவதாக தெரிவித்துள்ளார். பல நாடுகளில் தொற்று எண்ணிக்கை அதிகரித்தாலும் மக்களின் அலட்சியம் காரணமாக அது தொடர்ந்து பரவி வருவதாகவும் அவர் தெரிவித்தார். தங்களுக்கு கொரோனா வராது என இளம் வயதினர் திடமாக நம்புவதாகவும், ஆனால் அது தவறு என்றும் டெட்ராஸ் குறிப்பிட்டார். எனினும் பொதுமக்களின் ஒத்துழைப்பு மூலம் இத்தொற்றை கட்டுக்குள் கொண்டு வருவது சாத்தியம் என்பது நமக்கு தெரியவந்துள்ள உண்மை என்றும், உலக சுகாதார அமைப்பின் இயக்குநர் தெரிவித்துள்ளார்.

இதே நிகழ்ச்சியில் பேசிய உலக சுகாதார அமைப்பின் உயரதிகாரி மரியா வான் கெர்கோவ், தொடர்ந்து 7 வாரமாக தொற்று பரவல் அதிகரித்து வருவதாகவும், கடந்த ஒரு வாரத்தில் மட்டும் உலகில் கொரோனா தொற்று 9% அதிகரித்துள்ளதாகவும் குறிப்பிட்டார். மேலும் இறப்பு எண்ணிக்கையும் ஒரே வாரத்தில் 5% அதிகரித்துள்ளதாகவும் அவர் கூறினார்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com