பிரிட்டன் இளவரசி டயானா கார் விபத்தில் 1992ம் வருடம் கணவர் சார்லஸுடன் ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக பிரிந்தார். இவர்களுக்கு வில்லியம் ஹாரி என இரண்டு மகன்கள். சார்லஸை பிரிந்த பிறகு ஜேம்ஸ் ஹெவிட் என்ற ராணுவ வீரருடன் டயானாவுக்கு பழக்கம் ஏற்பட்டது. இவர்களுக்குப் பிறந்தவர்தான் ஹாரி என்று பிரிட்டனின் கிசுகிசுக்கப்படுவது உண்டு. ஹாரி-ஜேம்ஸ் ஆகியோரின் தலைமுடி சிவப்பு நிறமாக இருப்பதால் இப்படிக் கூறப்பட்டது.
ஆனால் ஜேம்ஸ் இரு மாதங்களுக்கு முன் இதை மறுத்திருந்தார்.
இந்நிலையில், சமீபத்தில் இருவரின் உடல் தோற்றங்கள் மற்றும் அடையங்கள் குறித்து அரச குடும்பத்துக்கு வேண்டிய நிபுணர்கள் நடத்திய ஆய்வில் ஹாரி, சார்லஸ் மகன்தான் என தெரியவந்துள்ளது. அதற்கான ஆதாரங்களையும் அவர்கள் கூறியுள்ளனர்.
ஹாரியின் கண்கள் நீல நிறம், ஜேம்ஸின் கண்கள் பழுப்பு நிறம். ஜேம்ஸின் பற்கள் பெரிதாகவும், ஹாரியின் பற்கள் சிறியதாகவும் உள்ளன. ஹாரிக்கு புருவம் குறைவு. Jamesக்கு அதிகம். இப்படி ஏகப்பட்ட ஒற்றுமை வேற்றுமைகளை பாகம் பிரித்து ஆராய்ந்துள்ளது அந்த நிபுணர் குழு.
இதன் மூலம் ஒரு சர்ச்சை முடிவுக்கு வந்திருக்கிறது.