\
அமேசானின் அடுத்த சி.இ.ஓ ஆன்டி ஜாஸி... யார் இவர்?

அமேசானின் அடுத்த சி.இ.ஓ ஆன்டி ஜாஸி... யார் இவர்?

அமேசானின் அடுத்த சி.இ.ஓ ஆன்டி ஜாஸி... யார் இவர்?
Published on: 

அமேசான் தலைமை செயல் அதிகாரியாக உள்ள ஜெப் பெஸாஸ் தன்னை அந்த பொறுப்புகளிலிருந்து விடுவித்துக் கொள்ள உள்ளதாக அறிவித்துள்ளார். அவருக்கு அடுத்தபடியாக அமேசானின் அடுத்த தலைமை செயல் அதிகாரியாக 53 வயதான ஆன்டி ஜாஸி பணியாற்ற உள்ளார். உலகின் முன்னணி நிறுவனமான அமேசானின் அடுத்த தலைமை செயல் அதிகாரியான ஆன்டி ஜாஸி யார்?

-கடந்த 1997-இல் அமேசான் நிறுவனத்தில் இணைந்தவர் ஜாஸி. ஹார்வேர்டு பிசினஸ் ஸ்கூலில் MBA முடித்த கையோடு பணியில் சேர்ந்தவர். நியூயார்க் நகரை பூர்வீகமாக கொண்டவர். 

-”நான் ஹார்வேர்டில் MBA தேர்வுகளை ஒரு வெள்ளிக்கிழமை அன்று எழுதி முடித்தேன். அதற்கடுத்த திங்கள் அன்றே அமேசானில் பணிக்கு சேர்ந்து விட்டேன். என்னுடைய வேலை என்ன? பதவி என்ன? என்ற எந்த விவரத்தையும் நான் அறிந்திருக்கவில்லை. அது ஒரு அற்புதமான அனுபவம்” என இந்நாள் ஹார்வேர்டு MBA மாணவர்கள் மத்தியில் கடந்த செப்டம்பர் அன்று பேசியவர் ஆன்டி ஜாஸி. 

-ஆரம்பத்தில் பெஸாஸின் டெக்னிக்கல் அட்வைசராக ஜாஸி பணியாற்றி உள்ளார். 

-கடந்த 2006 வாக்கில் அமேசான் வெப் சர்வீஸசை ஜாஸி நிறுவினார். இன்று உலகின் கிளவுட் சர்வீஸ் புரொவைடராக அதை முன்னேற்றியுள்ளார். 

-அவ்வப்போது சமூகத்தில் எழும் பிரச்சனைகளுக்கும் ஜாஸி குரல் கொடுத்துள்ளார். 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com