கொரோனாவின் மோசமான விளைவுகளை இனிதான் உலகம் சந்திக்கும் - உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை

கொரோனாவின் மோசமான விளைவுகளை இனிதான் உலகம் சந்திக்கும் - உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை

கொரோனாவின் மோசமான விளைவுகளை இனிதான் உலகம் சந்திக்கும் - உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை
Published on

கொரோனா வைரசால், மோசமான விளைவுகளை இனிமேல் தான் உலகம் சந்திக்கப் போவதாக உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

பெருந்தொற்று காலத்தில் அனைவரும் இணைந்து செயலாற்றுவது அவசியம் என உலக சுகாதார அமைப்பின் இயக்குநர் டெட்ரோஸ் தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் விவகாரத்தில் உலக சுகாதார அமைப்பு சீனாவுக்கு ஆதரவாக செயல்படுவதாக குற்றஞ்சாட்டிய அமெரிக்கா, அதற்கு வழங்கி வந்த நிதியையும் தற்காலிகமாக நிறுத்தியுள்ளது. இதற்கு பல்வேறு நாடுகளும் கண்டனம் தெரிவித்தன.

இந்நிலையில் கொரோனா வைரஸை அரசியல் பிரச்னை ஆக்காதீர்கள் அது நோய்த்தொற்றை மேலும் அதிகரிக்க செய்யும் என உலக சுகாதார அமைப்பின் இயக்குநர் டெட்ரோஸ் தெரிவித்துள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், பெருந்தொற்று காலத்தில் அனைவரும் இணைந்து செயலாற்றுவது அவசியம் எனக் கூறினார்.

ஒன்றாக இணைந்து கொரோனா வைரஸ் பரவலை தடுக்க வேண்டும் எனக்கூறிய டெட்ரோஸ், கொரோனா வைரஸைப் பொருத்தவரையில், மோசமான விளைவுகளை இனிதான் நாம் சந்திக்க போகிறோம் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com