\
அமர்நாத் யாத்ரீகர்கள் மீதான தாக்குதல்… அமெரிக்கா கடும் கண்டனம்

அமர்நாத் யாத்ரீகர்கள் மீதான தாக்குதல்… அமெரிக்கா கடும் கண்டனம்

அமர்நாத் யாத்ரீகர்கள் மீதான தாக்குதல்… அமெரிக்கா கடும் கண்டனம்
Published on: 

அமர்நாத் யாத்ரீகர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு அமெரிக்கா கண்டனம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக அமெரிக்க அதிபர் மாளிகை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் அமர்நாத் யாத்ரீகர்கள் மீது ஜூலை10ல் நடத்தப்பட்ட கோழைத்தனமாக தாக்குதலுக்கு கடுமையான கண்டத்தைப் பதிவு செய்துகொள்வதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்துக் கொள்வதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது. மத சுதந்திரத்தின் மீதான தாக்குதல் அடிப்படை சுதந்திரத்தின் மிது நடத்தப்பட்ட தாக்குதலே என்று கூறியுள்ள அமெரிக்கா, உலகின் ஒவ்வொரு பகுதியிலும் இருக்கும் தீவிரவாத அச்சுறுத்தலுக்கு எதிராக இந்தியாவுடன் இணைந்து செயல்படும் என்றும் தெரிவித்துள்ளது.   
 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com