\
Which Countries Use AI the Most Worldwide?
AI Reuters

AI புரட்சி.. உலகில் அதிகம் பயன்படுத்தும் நாடுகள் பட்டியல்!

சாட் ஜிபிடி, ஜெமினி, கிளாட்: ஏஐ டூல் பயன்பாட்டில் அமெரிக்கா முதலிடம், இந்தியா இரண்டாம் இடம் பிடித்துள்ளது.
Published on

உலகளவில் சாட் ஜிபிடி, ஜெமினி, கிளாட் போன்ற ஏஐ டூல்கள் பயன்பாடு கடந்தாண்டு உலகளவில் எப்படி இருந்தது... எந்தெந்த நாடுகள் முதல் 10 இடங்களில் உள்ளன என்பதை இங்குப் பார்க்கலாம்...

ஏஐ டூல் தளங்களை பயன்படுத்துவதில் 2,690 கோடி நுழைவுகளுடன் அமெரிக்கா முதலிடத்தில் இருந்தது. இது மொத்த நுழைவுகளில் 21.4% ஆகும். இந்தியா 1,200 நுழைவுகளுடன் 2ஆவது இடத்தில் இருந்தது. இதன் சதவீதம் 9.5% ஆகும். பிரேசிலின் நுழைவுகள் 700 கோடியாகவும் உலகளவில் பங்களிப்பு சதவீதம் 5.6 ஆகவும் இருந்தது. ஜெர்மனி 460 கோடி நுழைவுகளுடன் 3.6% பங்களிப்புடன் 4ஆம் இடத்தில் இருந்தது.

யுனைட்டெட் கிங்டம் 380 கோடி நுழைவுகளுடன் 3.1% பங்களிப்புடன் 5ஆம் இடத்தில் இருந்தது. இந்தோனேசியா 370 கோடி நுழைவுகள், 2.9% பங்களிப்புடன் 6ஆம் இடத்தைப் பிடித்திருந்தது. பிரான்ஸ் 340 கோடி நுழைவுகளுடன் 2.7% பங்களிப்பை பெற்றிருந்தது. ஜப்பான் 330 கோடி நுழைவுகள், 2.6% பங்களிப்புடன் 8ஆவது இடத்திலும் கனடா 300 கோடி நுழைவுகள், 2.4% பங்களிப்புடன் 9ஆவது இடத்திலும் இருந்தன.

Anthropic AI
Anthropic AIreuters

பிலிப்பைன்ஸ் 290 கோடி நுழைவுகள், 2.3% பங்களிப்புடன் டாப் 10-இல் கடைசி இடத்தைப் பிடித்திருந்தது. கடந்தாண்டில் ஒட்டுமொத்தமாக 12,500 கோடி நுழைவுகள் நிகழ்ந்திருந்தன. இது முந்தைய ஆண்டைவிட 46% அதிகம் ஆகும்.

Which Countries Use AI the Most Worldwide?
விண்வெளியிலும் ஆயுதங்களை குவித்த அமெரிக்கா.. எதற்காக? அதிர்ச்சியில் உலக நாடுகள்!
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com