மத்திய கிழக்கில் ராணுவத் தளங்கள்.. ஆதிக்கம் செலுத்தும் அமெரிக்கா!
அமெரிக்காவின் ஐந்தாவது கடற்படை தளம் பஹ்ரைனில் அமைந்துள்ளது. இந்த தளம், 4 கண்ணிவெடி எதிர்ப்புக் கப்பல்கள், இரண்டு தளவாட ஆதரவு கப்பல்கள் மற்றும் பல அமெரிக்க கடலோர காவல்படை கப்பல்களை கொண்டுள்ளது. இது 1948ஆம் ஆண்டு முதல் அமெரிக்க கடற்படையால் பயன்படுத்தப்பட்டு வருகிறது. கத்தாரில் உள்ள அல்-உதெய்த் விமானப் படைத் தளம் மத்திய கிழக்கில் மிகப்பெரிய அமெரிக்க இராணுவத் தளமாகும். இதில் சுழலும் போர் விமானங்கள் நிறுத்தி வைக்கப்படுள்ளன.
ஈராக்கில் உள்ள அல் - அன்பார் கவர்னரேட்டில் இரண்டு அமெரிக்க விமானத்தளங்கள் உள்ளன. இங்கு அமெரிக்காவின் 2,500 துருப்புகள் நிறுத்தி வைக்கப்படுள்ளன. தெற்கு சிரியாவில் உள்ள அல்தன்ஃப் காரிஸன் விமானத்தளம், ஈரானுடன் தொடர்புடையவர்களின் நடவடிக்கைகளை கண்காணிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. குவைத்தில் உள்ள அலி அல்-சேலம் விமானத்தளம் விமானப் போக்குவரத்து நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்படுகிறது, அதேபோல் மற்றொரு முக்கிய தளமான கேம்ப் அரிஃப்ஜன் விமானத்தளம் ராணுவ உபகரணங்களை வழங்குகிறது. ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உள்ள அல் தஃப்ரா விமானப் படைத்தளம் எஃப் - 22 ராப்டார் போர் விமானங்கள், ட்ரோன்கள் மற்றும் கண்காணிப்பு விமானங்களை இயக்குகிறது.