அமெரிக்காவில் உள்ள இளைஞர் ஒருவர், வாட்ஸ் ஆப் மூலம் தனது மனைவியை விவாகரத்து செய்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஹைதரபாதைச் சேர்ந்தவர் ஹுசைன் குரேஷி. இவர் தற்போது அமெரிக்காவின் நியூயார்க் நகரில் பணியாற்றி வருகிறார். இவருக்கும் ஐதராபாத்தைச் சேர்ந்த மெஹ்ரீன் நூர் என்ற பெண்ணுக்கும் கடந்த 2015- ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. ஹுசைன் அமெரிக்கா சென்ற பின், அவரது வீட்டில் வசித்து வந்தார் மெஹ்ரீன். இந்நிலையில் அமெரிக்காவில் இருக்கும் ஹுசைன், விவாகரத்து கோரி தமது மனைவி மெஹ்ரீனுக்கு வாட்ஸ் அப் மூலம் தகவல் அனுப்பினார். அதாவது தலாக் என்று மூன்று முறை கூறி விவகாரத்து செய்வதாக அந்த தகவல் இருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்தார் மெஹ்ரீன். இனி தனது வீட்டில் வசிக்கக் கூடாது என்று ஹூசைனின் தந்தை, மெஹ்ரீனை வெளியேற்றினாராம். இதையடுத்து, அவர் போலீசில் புகார் செய்ததையடுத்து ஹுசைனின் அப்பாவை கைது செய்துள்ளனர்.