வாட்ஸ்அப் நிறுவனத்துக்கு பை.. பை..!

வாட்ஸ்அப் நிறுவனத்துக்கு பை.. பை..!

வாட்ஸ்அப் நிறுவனத்துக்கு பை.. பை..!
Published on

வாட்ஸ்அப் நிறுவனத்தைவிட்டு வெளியேறுவதாக பிரையன் ஆக்டன் அறிவித்திருக்கிறார்.

ஜேன் கோம் மற்றும் பிரையன் ஆக்டன் இருவரும் கூடி 2009 ஆம் ஆண்டு உருவாக்கிய சமூக வலைதளம் தான் வாட்ஸ்அப். இவர்கள் இருவரும் ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவர்கள். இந்த நட்பு புதியதாக ஒரு நிறுவனத்தை தொடங்கும் அளவுக்கு கொண்டு போனது. வாட்ஸ்அப்பை 2004 ஆம் ஆண்டு 19 பில்லியன் டாலர்கள் கொடுத்து ஃபேஸ்புக் நிறுவனம் வாங்கியது. அன்று முதல் ஃபேஸ்புக் நிறுவனம் மூலம் இயங்கி வந்தது வாட்ஸ்அப்.

வாட்ஸ்அப்பின் இணை நிறுவனரான பிரையன் ஆக்டன் அந்நிறுவனத்தில் இருந்து வெளியேற இருப்பதாக அறிவித்திருக்கிறார். இவரின் முடிவு உலக வர்த்தக வட்டாரத்தை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது. பிரையன் இலாப நோக்கமற்ற தகவல்தொடர்பு சார்ந்த ஒரு தொழில்நுட்ப நிறுவனத்தை தொடங்க முடிவெடுத்திருப்பதால் இந்த முடிவை அவர் மேற்கொண்டிருப்பதாக தெரிய வருகிறது. இந்த முடிவை பற்றி அவரது ஃபேஸ்புக் பக்கத்தில் கருத்திட்டுள்ள பிரையன் “இந்த வயதில் ரிஸ்க் எடுப்பதற்காக வாய்ப்பும் வசதியும் இருப்பது எனது அதிருஷ்டம்தான். ஆகவே என்னுடைய லட்சியங்களை நோக்கி நகர்கிறேன்” என்று கூறியிருக்கிறார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com