பெண்களுக்கு என்ன கற்றுக்கொடுக்க வேண்டும்?: மிஸ் யுனிவர்ஸ் பட்டம் வென்ற பெண்ணின் அசத்தல் பதில்!

பெண்களுக்கு என்ன கற்றுக்கொடுக்க வேண்டும்?: மிஸ் யுனிவர்ஸ் பட்டம் வென்ற பெண்ணின் அசத்தல் பதில்!

பெண்களுக்கு என்ன கற்றுக்கொடுக்க வேண்டும்?: மிஸ் யுனிவர்ஸ் பட்டம் வென்ற பெண்ணின் அசத்தல் பதில்!
Published on

2019-ம் ஆண்டுக்கான மிஸ் யுனிவர்ஸ் அழகிப் போட்டியில் தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த சோசிபினி துன்சி மிஸ் யுனிவர்ஸாக முடிசூட்டப்பட்டார்

அமெரிக்காவின் அட்லாண்டாவில் 2019-ம் ஆண்டுக்கான மிஸ் யுனிவர்ஸ் அழகிப்போட்டி நடைபெற்றது. இந்தப்போட்டியில் தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த சோசிபினி துன்சி 2019 மிஸ் யுனிவர்ஸாக வெற்றி பெற்று முடிசூட்டப்பட்டார். 

இரண்டாவது இடத்தை புவர்ட்டோ ரிக்கோவின் மேடிசன் ஆண்டர்சன் பிடித்தார். மெக்சிகோவைச் சேர்ந்த சோபியா மூன்றாவது இடத்தை பிடித்தார். இந்தியாவின் சார்பில் பங்கேற்ற வர்திகா சிங், முதல் 20 இடங்களுக்குள் தகுதி பெற்றார். ஆனால் முதல் 10 இடங்களுக்குள் தகுதி பெறவில்லை.

இந்தப்போட்டியில் கடைசி சுற்றுக்கு தகுதி பெற்ற 3 பேரிடமும் ஒரு பொதுவான கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு சோசிபினி அளித்த பதிலே அனைவரையும் கவர்ந்தது. அந்த பதில்தான் அவருக்கு மிஸ் யுனிவர்ஸ் பட்டத்தையும் வாங்கிக் கொடுத்துள்ளது. ''இன்றைய காலக்கட்டத்தில் இளம் பெண்களுக்கு நாம் கற்றுக்கொடுக்க வேண்டிய முக்கிய விஷயம் எது?'' எனக் கேள்வி கேட்கப்பட்டது. 

அதற்கு பதிலளித்த தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த சோசிபினி துன்சி, இளம் பெண்களுக்கு நாம் கற்றுக்கொடுக்க வேண்டிய முக்கிய விஷயம் தலைமைப் பண்பு என தெரிவித்தார். மேலும் சமூகத்தில் பெண்கள் தனக்கென தனி இடத்தை உருவாக்கிக்கொண்டு உங்களை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும். அதுதான் எல்லாவற்றை விடவும் முக்கியனமானது என தெரிவித்தார்.  சோசிபினி துன்சியின் இந்த பதில் அனைவராலும் பாராட்டப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com