பனாமா பேப்பர் என்றால் என்ன?

பனாமா பேப்பர் என்றால் என்ன?
பனாமா பேப்பர் என்றால் என்ன?

பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிபின் பதவியைப் பறித்தது பனாமா பேப்பர்ஸ் விவகாரம். அப்படி என்றால் என்ன?

கடந்த 2015 ஆம் ஆண்டு பனாமா நாட்டைச் சேர்ந்த மொசாக் ஃபென்செக்கா என்ற சட்ட நிறுவனத்தின் ரகசிய ஆவணங்கள் ஜெர்மனியைச் சேர்ந்த ஓர் ஊடகத்தில் வெளியானது. வெளிநாடுகளில் வரி ஏய்ப்பு செய்வதற்கும் பொருளாதாரத் தடைகளை மறைத்து சொத்துகளை வாங்குவதற்கும் வசதி செய்து கொடுப்பதுதான் இந்த நிறுவனத்தின் பணி. இந்த நிறுவனத்தில் இருந்து ஒரு கோடிக்கும் மேற்பட்ட ஆவணங்கள் வெளியிடப்பட்டன. ஆவணங்களின் எண்ணிக்கை மிக அதிகம் என்பதால் 80 நாடுகளைச் சேர்ந்த சுமார் 107 ஊடக நிறுவனங்களைச் சேர்ந்த செய்தியாளர்கள் இவற்றை ஆய்வு செய்தனர். 

இரண்டு லட்சத்துக்கும் அதிகமானோர் வரி ஏய்ப்பு செய்து வெளிநாடுகளில் சொத்துகளைக் குவித்திருப்பது பற்றி இந்த ஆய்வு மூலம் தெரிய வந்தது. அரசியல்வாதிகள், தேசத் தலைவர்கள், தொழிலதிபர்கள் உள்ளிட்டோருடன் பெரு நிறுவனங்கள், தன்னார்வ அமைப்புகள், வங்கிகள் போன்றவையும் இவற்றில் அடங்கும். ரஷ்ய அதிபர் விளாதிமிர் புடின், பிரிட்டன் முன்னாள் பிரதமர் டேவிட் கேமரன், கால்பந்து வீரர் லயனல் மெஸ்ஸி, பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீபின் தம்பி ஷாபாஸ் ஷெரீப், மகள் மரியம் உள்ளிட்டோர் மீதும் குற்றம் சாட்டப்பட்டிருக்கிறது. இப்படிப் பல பிரபலங்களை மாட்டி விட்ட அந்த ஆவணங்கள்தான் பனாமா பேப்பர்ஸ் எனப்படுகிறது. 
 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com