ஹமாஸ் அமைப்புக்கு யாரெல்லாம் ஆதரவு.. இஸ்ரேலுக்கு யாரெல்லாம் ஆதரவு.. இந்தியாவின் நிலைப்பாடு என்ன?

இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பு தொடுத்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் நடத்தப்பட்டுவரும் போரில் ஆயிரக்கணக்கானோர் பலியாகிவருகின்றனர்.
இஸ்ரேல் பாலஸ்தீனம் போர்
இஸ்ரேல் பாலஸ்தீனம் போர்PT

திடீரென தாக்குதல் நடத்திய ஹமாஸ் அமைப்பு

இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பினர் எதிர்பாராமல் நடத்திய ஊடுருவல் மற்றும் ஏவுகணைத் தாக்குதல் காரணமாக 300க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இதைத் தொடர்ந்து இஸ்ரேல் படையினர் பதிலடி தாக்குதலை தீவிரப்படுத்தினர்.

இஸ்ரேல் பாலஸ்தீனம் போர்
இஸ்ரேல் பாலஸ்தீனம் போர்முகநூல்

ஹமாஸ் ஆயுதக் குழுவினரின் ஆக்கிரமிப்பில் இன்னும் 8 பகுதிகள் இருப்பதாகவும் அனைத்து பகுதிகளும் முழு கட்டுப்பாட்டில் வரும் வரை ஹமாஸ்க்கு எதிரான போர் தொடரும் என்றும் இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. 100க்கும் அதிகமான ஹமாஸ் குழுவினர் கொல்லப்பட்டுள்ளதாகவும் குறிப்பாக இஸ்ரேலுக்குள் ஊடுருவிய ஹமாஸ் படையினர் சுட்டுக்கொல்லப்பட்டதாகவும் இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.

கருப்பு தினம் - இஸ்ரேல் பிரதமர்

இஸ்ரேல் மீதான தாக்குதலை கருப்பு தினமாக அறிவித்த அந்நாட்டு பிரதமர் பெஞ்சமின் நெத்தன்யாகு, இஸ்ரேல் படையின் முழு ஆற்றலும் ஹமாஸின் ஆற்றலை அழிக்க பயன்படுத்தப்படும் என கூறினார். காஸா பகுதியில் இருப்போரை உடனடியாக வெளியேறும்படி அவர் அறிவுறுத்தியுள்ளார்..

இஸ்ரேல் பிரதமர்
இஸ்ரேல் பிரதமர்

காசாவில் வங்கிகளை குறிவைத்தும் ஹமாஸ் உளவுப்பிரிவு தலைவரின் குடியிருப்பு, ஆயுதக் கிடங்குகளை குறிவைத்தும் ஏவுகணைத் தாக்குதலை இஸ்ரேல் தீவிரப்படுத்தியுள்ளது. காசாவில் 426 இடங்களை குறிவைத்து இஸ்ரேல் நாட்டு போர் விமானங்கள் தாக்குதல் நடத்தி வருகின்றன. இஸ்ரேலின் பதில் தாக்குதலில் காஸா பகுதியில் 300க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். காஸா எல்லையருகே உள்ள இஸ்ரேலிய மக்கள் அனைவரையும் 24 மணி நேரத்திற்குள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்த இஸ்ரேல் நடவடிக்கை எடுத்துள்ளது.

ஹமாஸ்க்கு ஆதரவாக களமிறங்கிய ஹெஸ்புல்லா அமைப்பினர்!

ஹமாஸ் அமைப்பினருக்கு ஆதரவாக இஸ்ரேல் மீது லெபனானின் ஹெஸ்புல்லா அமைப்பினரும் தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர். ஹமாஸ் அமைப்புக்கு தங்களது ஆதரவை தெரிவிக்கும் வகையில் எல்லைப்பகுதியில் ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியதாக அந்த அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.

இஸ்ரேல் பாலஸ்தீனம் போர்
இஸ்ரேல் பாலஸ்தீனம் போர்

இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பு நடத்திய தாக்குதலுக்கு இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது. இந்த விவகாரத்தில் இந்தியாவின் நிலைப்பாட்டை உலக நாடுகள் உன்னிப்பாக கவனித்து வருகின்றன.

இந்தியாவின் நிலைப்பாடு

இஸ்ரேல் நாட்டில் ஹமாஸ் அமைப்பு நடத்தியுள்ள தாக்குதலுக்கு எதிர்ப்பு மற்றும் ஆதரவு குரல்கள் ஒலிக்கும் நிலையில் இந்தியாவின் நிலைப்பாடு சர்வதேச அரங்கில் உன்னிப்பாக கவனிக்கப்படுகிறது. இதற்கு முன்பு பல சந்தர்ப்பங்களில் பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாகவும், போருக்கு எதிராகவும் இந்தியா குரல் கொடுத்துள்ள நிலையில், தற்போது இஸ்ரேல் நாட்டின் மீது நடைபெற்றுள்ள தாக்குதலுக்கு உடனடியாக கண்டனம் தெரிவித்த நாடுகளின் பட்டியலில் இந்தியா இடம்பெற்றுள்ளது.

modi
modi

இஸ்ரேல் விவகாரத்தில் அந்த நாட்டில் தீவிரவாத தாக்குதல் நடைபெற்றுள்ளது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும் எனவும், இந்தியாவும் தொடர்ந்து பல தசாப்தங்களாக தீவிரவாத தாக்குதல்களால் பாதிக்கப்பட்டுள்ளது என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும் என அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் சமீப வருடங்களாக இந்தியா-இஸ்ரேல் உறவு நெருக்கமாகி வருகிறது எனவும் இஸ்ரேல் பல பாதுகாப்புத்துறை தொடர்பான தொழில்நுட்பங்களை இந்தியாவுக்கு அளித்துள்ளது எனவும் நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹூ மற்றும் பிரதமர் நரேந்திர மோடி இடையே நட்பு வலுவாக உள்ளது என்பதையும் அவர்கள் சுட்டிக் காட்டினார். G20 மாநாட்டில் ரஷ்யா உக்ரைன் போர் நிறுத்தத்துக்கு ஆதரவாக தீர்மானம் நிறைவேற்றுவதில் வெற்றி பெற்ற நிலையில், இஸ்ரேல் விவகாரத்தில் இந்தியாவின் நிலைப்பாடு கூடுதல் முக்கியத்துவம் பெறுகிறது.

ஹமாஸ் அமைப்புக்கு யாரெல்லாம் ஆதரவு?

ஹமாஸ் அமைப்பின் தாயகமாக கருதப்படும் ஈரான் தொடர்ந்து ஹமாஸ் அமைப்பினருக்கு நிதி உதவி, ஆயுத உதவி, பயிற்சி மற்றும் பிற உதவிகள் அளித்து வருகிறது. இந்நிலையில் ஈரான், கட்டார் மற்றும் பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகள் ஹமாஸ் அமைப்புக்கு ஆதரவு தெரிவித்துள்ளன. லெபனான் பொதுமக்களும் பெருமளவில் ஹமாஸ் அமைப்புக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

இஸ்ரேலுக்கு யாரெல்லாம் ஆதரவு?

அதே சமயத்தில் அமெரிக்கா, பிரிட்டன், கனடா, பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகள் இஸ்ரேலுக்கு தங்கள் ஆதரவை தெரிவித்து ஹமாஸ் தாக்குதலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

போர் நிறுத்தம் கோரும் நாடுகள்!

ரஷ்யா உள்ளிட்ட சில நாடுகள் போர் நிறுத்தம் தேவை என வலியுறுத்தியுள்ள நிலையில், துருக்கி மற்றும் சவுதி அரேபியா போன்ற நாடுகள் எத்தகைய நிலைப்பாட்டை தெரிவிப்பார்கள் என்பது உன்னிப்பாக சர்வதேச அரங்கில் கவனிக்கப்படுகிறது.

1000-ஐ கடந்த பலி எண்ணிக்கை

இஸ்ரேல், ஹமாஸ் ஆயுதக்குழுவினர் இடையேயான போரில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை ஆயிரத்தை கடந்துள்ளது. பாலஸ்தீனத்தின் ஆளுகைக்குட்பட்ட காஸா முனையில் இருந்து செயல்படும் ஹமாஸ் ஆயுதக்குழுக்கள், யாரும் எதிர்பாராத வகையில் இஸ்ரேல் மீது தாக்குதல் தொடுத்தது. ஹமாஸ் ஆயுதக்குழுவினரின் தாக்குதலுக்கு இஸ்ரேல் தரப்பிலும் தக்க பதிலடி கொடுக்கப்பட்டது. காஸா பகுதிகளில் உள்ள ஹமாஸ் குழுவினரின் இருப்பிடங்களை நோக்கி இஸ்ரேல் வான்வழி தாக்குதலை மேற்கொண்டது.

இஸ்ரேல் பாலஸ்தீனம் போர்
இஸ்ரேல் பாலஸ்தீனம் போர்

போர் தொடங்கியுள்ளதாக இஸ்ரேல் தரப்பில் அறிவிக்கப்பட்ட சூழலில், ஹமாஸ் படைகளின் பதுங்கு குழிகள், மறைவிடங்களை குறிவைத்து இஸ்ரேல் படையினர் நள்ளிரவிலும் ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தினர். இஸ்ரேல் நகரங்களை நோக்கி ஹமாஸ் படையினரும் தாக்குதலை தொடர்ந்தனர். ஹமாஸ் குழுவினர், இஸ்ரேலிய படைகள் நடத்திய தாக்குதலில் இரண்டு தரப்பிலும் ஆயித்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாகவும், ஆயிரத்து ஐநூறுக்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர். பலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் உயிரிழப்பு அதிகரிக்கக்கூடுமென கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com