சிரியா உள்நாட்டு போர்
சிரியா உள்நாட்டு போர்எக்ஸ் தளம்

சிரியா: அடுத்தடுத்து நடக்கும் அதிரடி நிகழ்வுகள்... முழு தொகுப்பு!

சிரியாவில் அடுத்தடுத்து அதிரடியாக அரங்கேறி வரும் நிகழ்வுகளின் தொகுப்பை காணலாம்
Published on

சிரியாவில் கிளர்ச்சிப்படைகள் தலைநகர் டமாஸ்கசை கைப்பற்றிய நிலையில் அதிபர் பஷார் அல் அசாத் நாட்டை விட்டு தப்பியுள்ளார். இதையடுத்து சிரியாவில் கொண்டாட்டங்கள் களைகட்டியுள்ளன. சிறைகளில் உள்ள கைதிகள் விடுவிக்கப்பட்டுள்ளனர். சிரியாவில் அடுத்தடுத்து அதிரடியாக அரங்கேறியுள்ள நிகழ்வுகளின் தொகுப்பை காணலாம்.

சிரியா
சிரியா

மத்திய கிழக்கு நாடுகளில் ஒன்றான சிரியாவை பஷார் அல் அசாத் கடந்த 24 ஆண்டுகளாக ஆட்சி புரிந்துவந்த நிலையில் அவருக்கு எதிராக போர்க்கொடி உயர்த்திய கிளர்ச்சியாளர்கள் மெல்லமெல்ல முன்னேறி தற்போது தலைநகர் டமாஸ்கசை கைப்பற்றினர். HTS என அழைக்கப்படும் ஹயாத் தஹ்ரிீர் அல் ஷாம் என்ற கிளர்ச்சிப் படையும் சிரியன் தேசிய ராணுவம் என்ற கிளர்ச்சிக்குழுவும் இணைந்து அசாத்தின் கால் நூற்றாண்டு ஆட்சிக்கு முடிவு கட்டியுள்ளன. இதையடுத்து சிரியாவில் 13 ஆண்டுகளாக நடந்து வந்த உள்நாட்டுப்போர் முடிவுக்கு வந்துள்ளது.

சிரியா உள்நாட்டு போர்
சிரியா: கிளர்ந்த கிளர்ச்சி.. தப்பியோடிய அதிபர்.. விபத்துக்குள்ளான விமானம்..? என்ன நடந்தது?

பஷார் அல் அசாத்தின் வீழ்ச்சியை தலைநகரில் மக்கள் கொண்டாடினர். வாகனங்களின் ஹாரனை ஒலித்து அவர்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். சிறைக்கதவுகள் திறக்கப்பட்டு கைதிகள் விடுதலை செய்யப்பட்ட காட்சிகளும் வெளியாகியுள்ளன. சில இடங்களில் வானை நோக்கி துப்பாக்கியால் சுட்டும் கொண்டாட்டங்கள் நடைபெற்றன. ஆட்சியிலிருந்து அகற்றப்பட்ட அதிபர் பஷார் அல் அசாத் மற்றும் அவரது தந்தையும் முன்னாள் அதிபருமான ஹபீஸ் அல் அசாத் ஆகியோரது சிலைகள் உடைக்கப்பட்டன.

சிரியா போர்
சிரியா போர்

பஷாரை ஆட்சியிலிருந்து இறக்கும் தங்கள் 13 ஆண்டு முயற்சி வெற்றிபெற்று விட்டதாக HTS அமைப்பின் அபு முகமது அல் கொமானி சிஎன்என் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்துள்ளார். இத்தனை ஆண்டுகளாக கிடைத்து வந்த ரஷ்யா மற்றும் ஈரானின் ஆதரவு தற்போது கிடைக்காத சூழல் ஏற்பட்டதே பஷார் அல் அசாத்தின் வீழ்ச்சிக்கு காரணம் என்கிறார் வரலாற்று பேராசிரியர் பெர்னார்டு டி சாமி.

சிரியா உள்நாட்டு போர்
சிரியா: புண்ணிய பூமியில் உள்நாட்டுப் போரால் ஏற்பட்ட வறுமை.. தற்போதைய நிலைக்கு என்ன காரணம்?

இதற்கிடையே நாட்டை விட்டு தப்பிச்சென்ற பஷார் அல் அசாத் விமானம் எங்கே சென்றது என்ற தகவல் தெரியவில்லை. அவ்விமானத்தை கிளர்ச்சிப்படைகள் சுட்டு வீழ்த்திவிட்டதா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. சிரியாவில் ஏற்பட்டு வரும் மாற்றங்களில் தங்களுக்கு எந்த தொடர்பும் இல்லை என்றும் மேற்கொண்டு அதில் தலையிடப்போவதும் இல்லை என்றும் அமெரிக்கா ஆட்சிப்பொறுப்பை இன்னும் 40 நாட்களில் ஏற்க உள்ள டொனால்டு ட்ரம்ப் கூறியுள்ளார்.

டொனால்ட் ட்ரம்ப்
டொனால்ட் ட்ரம்ப்எக்ஸ் தளம்

அரபு நாடுகளில் கடந்த 2010ஆம் ஆண்டு சர்வாதிகார ஆட்சியாளர்களை அகற்றும் மக்கள் புரட்சிகள் வரிசையாக வெற்றிபெற்று வந்தன. அரப் ஸ்ப்ரிங் என அழைக்கப்படும் ஆட்சியாளர்களுக்கு எதிரான கிளர்ச்சிகள் டுனிசியா, எகிப்து, லிபியா, யேமன் போன்ற நாடுகளில் வெடித்து அரசுகள் அகற்றப்பபட்டன. இந்த வரிசையில் 2011இல் சிரியாவில் தொடங்கிய கிளர்ச்சி தற்போது முடிவுக்கு வந்துள்ளது.

சிரியா உள்நாட்டு போர்
சிரியா: நீடிக்கும் பதற்றம்.. மத்திய வங்கி கொள்ளை அடிக்கப்பட்டதால் அதிர்ச்சி.. வெளியான வீடியோ!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com