தீபிகா படுகோனுக்கு விருது.. பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் டாவோஸ் மாநாடு!

தீபிகா படுகோனுக்கு விருது.. பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் டாவோஸ் மாநாடு!
தீபிகா படுகோனுக்கு விருது.. பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் டாவோஸ் மாநாடு!

சுவிட்சர்லாந்தில் நடைபெற்று வரும் உலகப் பொருளாதார கூட்டமைப்பு மாநாட்டின் முதல் நாள் கூட்டத்தில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப், இளம் சுற்றுச்சூழல் ஆர்வலர் கிரெட்டா தன்பெர்க் உள்ளிட்டோர் உரையாற்றினர்.

பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் 50-ஆவது உலகப்பொருளாதார கூட்டமைப்பு மாநாடு தொடங்கி நடைபெற்று வருகிறது. சர்வதேச அளவில் உச்சபட்ச அந்தஸ்து பெற்ற பிரபலங்கள் அரங்கை அலங்கரித்துள்ளனர். நடப்பாண்டிற்கான மாநாடு 'ஒத்திசைந்த நிலையான பங்குதாரர்களை உருவாக்குவது' என்ற மூலக் கருவைக் கொண்டு நடைபெறுகின்றது. உலக நாடுகளைச் சேர்ந்த உச்சபட்ச அந்தஸ்து கொண்ட தொழிலதிபர்கள், அரசியல் தலைவர்கள் மற்றும் பல்வேறு துறை சார்ந்த பிரபலங்கள் கலந்து கொண்டுள்ளனர்.

சர்வதேச கிறிஸ்ட்டல் விருது‌கள் விழாவுடன் தொடங்கிய மாநாட்டில் பாலிவுட் நடிகை தீபிகா படுகோனுக்கு மனநலம் குறித்த விழிப்புணர்வுக்கான விருது வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் பேசிய தீபிகா, பிற நோய்களுக்கு சிகிச்சை அளிப்பது போலவே ம‌‌னநோய்க்கும் சிகிச்சை அளிக்க இயலும், தற்கொலை என்பது தீர்வாகாது என மக்களை கேட்டுக்கொண்டார்.

பின்னர் மாநாட்டின் கருத்தரங்கில் பேசிய அமெரிக்க அதிபர் ட்ரம்ப் உலகப்பொருளாதாரத்தில் அமெரிக்கா மிகப்பெரிய முன்னேற்றம் கண்டுள்ளதாகவும், ஜப்பான் மற்றும் கொரியாவுடன் புதிய வர்த்தக ஒப்பந்தங்கள் செய்துள்ளதாகவும் தெரிவித்தார். மேலும் உலகிலேயே அமெரிக்காவில் தான் சுத்தமான காற்றும் நீரும் உள்ளதாக கூறினார்.

பலரின் எதிர்ப்பார்ப்புகளுக்கு மத்தியில் சுவிட்சர்லாந்தின் இளம் இயற்கை ஆர்வலர் கிரெட்டா தன்பெர்க் உரையாற்றினார். எதிர்கால சந்ததியினர் மீது அக்கறை இருந்தால் உடனடியாக பருவநிலை மாறுபாடு தொடர்பான பிரச்னைகளில் கவனம் செலுத்துங்கள் என தன்பர்க் பேசினார்.

நாளை மறுநாள் வரை நடைபெறவுள்ள இந்த மாநாட்டில் சர்வதேச நாடுகளுக்கு இடையே முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என கூறப்படுகிறது

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com