\
Weeks of rainfall and 'megafloods' could hit California
rainANI

மரண பயம் காட்டும் இயற்கை! பல வாரங்கள் தொடர் கனமழை! மெகா வெள்ளம் வரும்?

வரலாறு காணாத எல் நினோவின் தாக்கத்தால் கலிபோர்னியாவில் மிகப்பெரிய வெள்ளம் ஏற்படும் என்று காலநிலை விஞ்ஞானிகள் கணித்துள்ளனர்.
Published on: 

செய்தியாளர் - கார்த்திகேயன்

பசிபிக் பெருங்கடலின் மேற்பரப்பு வெப்பநிலை இயல்பை விட அதிகமாக உயரும் ஒரு இயற்கையான காலநிலை நிகழ்வு தான் எல் நினோ. இது ஒரு வழக்கமான நிகழ்வாக பார்க்கப்பட்டாலும், இந்த ஆண்டு மிகக் கடுமையான அளவில் அதிகரித்து சூப்பர் எல்நினோ நிகழ்வாக உருவெடுத்துள்ளது. இதன் காரணமாக, ஒரு சில நாடுகளில் மிகத் தீவிரமான வெப்பநிலையும், வறட்சியும் ஏற்படுகிறது. வேறு சில நாடுகளில் தீவிரமான மழைப்பொழிவு, வெள்ளம் போன்ற இயற்கை சீற்றங்கள் ஏற்பட்டு, மக்களை வாட்டி வதைத்து வருகிறது. இந்தியா மாதிரியான நாடுகளில், இரண்டு வகையான வானிலையும் ஏற்பட்டு, பாதிப்புகளை உண்டாக்கி வருகிறது. வரும் 2027-ஆம் ஆண்டுக்கான கோடைக் காலத்தில் இதன் தாக்கம் மிக அதிகமாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

Flood - file shot
Flood - file shotReuters

இப்படியான சூழ்நிலையில், வரலாறு காணாத எல் நினோ தாக்கத்தால், இந்த குளிர்காலத்தில் பல வாரங்களுக்கு தொடர்ச்சியான கனமழையும், பெரு வெள்ளமும் ஏற்பட இருப்பதாக, பகீர் தகவல்களை விஞ்ஞானிகள் வழங்கியுள்ளனர். அதாவது, 1861-62 ஆம் ஆண்டுக்கான குளிர்காலத்தில், கலிபோர்னியாவில் சுமார் 43 நாட்கள் தொடர் மழை பெய்து, மிகப்பெரிய வெள்ளம் ஏற்பட்டது. இந்த வரலாற்று நிகழ்வின் வானிலை தரவுகளை மையமாக வைத்து, காலநிலை விஞ்ஞானிகள் ஆய்வு ஒன்று மேற்கொண்டனர். அதில், அதே வரலாற்று பெருவெள்ளம் இந்த ஆண்டும் ஏற்பட வாய்ப்பு இருப்பதும், எல் நினோவின் தீவிரத்தால் தான் இந்த ஆண்டு ஏற்படும் சூழல் உருவாகியிருப்பதும் தெரியவந்துள்ளது. இந்த மிகப்பெரிய பேரழிவு கலிபோர்னியாவில் ஒரே நாளில் ஏற்படாது. பல வாரங்களுக்கு தொடர்ச்சியாக கனமழை பெய்து, அதன் மூலம் மெகா வெள்ளம் ஏற்பட்டு, பெரும் சேதங்கள் உருவாகும் என்று சொல்லப்படுகிறது.

குறிப்பாக, சென்ட்ரல் வேலி மற்றும் சாக்ரமெண்டோ-சான் ஜோவாகின் ஆற்றுப் பகுதிகளில் தான், இந்த மெகா வெள்ளம் ஏற்படுவதற்கான ஆபத்து அதிகம் என்றும் குறிப்பிட்டுள்ளார்கள். இதுமட்டுமின்றி, கலிபோர்னியாவில் உள்ள சுமார் 25 சதவீத கட்டடங்கள், வெள்ளத்தால் பாதிக்கப்படும் என்றும், கடலோர பகுதிகளும் பாதிக்கப்படலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.

பல லட்சம் மக்கள் தங்கள் இருப்பிடங்களில் இருந்து இடம்பெயர வேண்டிய நிலை உருவாகும் என்றும், போக்குவரத்து பாதைகள் துண்டிக்கப்படுவதோடு, விவசாய நிலங்கள் மூழ்கி, மிகப்பெரிய பொருளாதார இழப்பு ஏற்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது. விஞ்ஞானிகளின் இந்த அதிரடி கணிப்புகள், பொதுமக்களுக்கு பெரும் இடியை இறக்கியுள்ளது.

Weeks of rainfall and 'megafloods' could hit California
எப்போது மழை பெய்யும்? கிழக்கு திசை காற்று சாதகமாகுமா? டெல்டா வெதர்மேன் கணிப்பு!