swarovski crystals wedding dress
swarovski crystals wedding dress Guinness World Records

50,000+ படிகங்களுடன், 200 மணி நேரம் செய்யப்பட்ட திருமண ஆடை! கின்னஸ் சாதனையில் இடம்பிடித்து அசத்தல்!

அதிகமான படிகங்களைக் கொண்ட திருமண ஆடை ஒன்று கின்னஸ் சாதனைப் பட்டியலில் இடம்பிடித்துள்ளது.
Published on

இப்போதெல்லாம் மற்றவர்களும் வியக்கும் அளவுக்கு ஆடம்பரமாய் சில திருமணங்கள் நடத்தப்படுகின்றன. அங்கெல்லாம் ஃபோட்டோஷூட், விருந்து உபசரிப்பு போன்றவை மட்டுமின்றி, மணப்பெண்ணுக்கான ஆடை மற்றும் நகை அலங்காரங்களும் கண்ணைக் கவர்வதாய் இருக்கின்றன.

‘இந்த மணமகள் அணியும் ஆடைகள் இணையதளங்களில் வைரல் ஆகவேண்டும்’ என்ற நோக்கத்திலேயே அட்டகாசமாய் வடிவமைக்கப்படுகின்றன பெண்ணுக்கான ஆடைகள். அப்படியொரு ஆடைதான் தற்போது கின்னஸ் சாதனையில் இடம்பிடித்துள்ளது.

Wedding Dress With 50,890 Crystals
Wedding Dress With 50,890 Crystalsguinnessworldrecords.com

கடந்த மாதம் 14ஆம் தேதி அன்று மிலனில் நடைபெற்ற ஒரு ஃபேஷன் ஷோவில், 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஸ்வரோவ்ஸ்கி (Swarovski crystals) படிகங்களுடன் தைக்கப்பட்ட ஒரு நேர்த்தியான திருமண ஆடை ஒன்று அறிமுகம் செய்யப்பட்டது.

இந்த ஆடையில் 50,890 ஸ்வரோவ்ஸ்கி படிகங்கள் பொருத்தப்பட்டு வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த ஆடை இத்தாலியில் பிரபல திருமண ஆடை தயாரிக்கும் நிறுவனத்தால் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் பல்வேறு சிறப்பம்சங்கள் உள்ளன.

Wedding Dress With 50,890 Crystals
Wedding Dress With 50,890 Crystalsguinnessworldrecords.com

குறிப்பாக, ஆடையின் கைப்பகுதிகளில் மட்டும் ஆயிரக்கணக்கான படிகங்கள் தைக்கப்பட்டுள்ளனவாம். இதை தயாரிக்க, 200 மணி நேரம் ஆனதாக அந்த ஆடை நிறுவனம் தெரிவித்துள்ளது.

Wedding Dress With 50,890 Crystals
Wedding Dress With 50,890 Crystalsguinnessworldrecords.com

இதற்கு முன்பு இஸ்தான்புல்லில் 45 ஆயிரம் படிகங்களுடன் கூடிய ஓர் ஆடையை துருக்கியைச் சேர்ந்த நிறுவனம் அறிமுகப்படுத்தி கின்னஸ் சாதனை படைத்திருந்தது. தற்போது இந்த ஆடை, பழைய கின்னஸ் சாதனையை முறியடித்துள்ளது. தவிர, இந்த ஆடை சமூகவலைதளங்களிலும் வைரலாகி வருகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com