உலகம்
"இங்கிலாந்தில் முகக்கவசம் அணிவது தனிநபர் விருப்பம்"- அமைச்சர் ராபர்ட் ஜென்ரிக்
"இங்கிலாந்தில் முகக்கவசம் அணிவது தனிநபர் விருப்பம்"- அமைச்சர் ராபர்ட் ஜென்ரிக்
இங்கிலாந்தில் இனி முகக்கவசம் அணிவது தனி நபர் விருப்பம் என வீட்டுவசதித் துறை அமைச்சர் ராபர்ட் ஜென்ரிக் கூறியுள்ளார்.
ஊரடங்கு தளர்வுகளின் ஒரு பகுதியாக இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பெரும்பாலான மக்கள் முகக்கவசம் அணிவதை விரும்பவில்லை எனக் கூறியுள்ள ராபர்ட் ஜென்ரிக், அதனை தனிநபர் விருப்பம் சார்ந்த விவகாரத்திற்கு கொண்டு செல்ல இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் இங்கிலாந்தில் அனைத்து கொரோனா கட்டுப்பாடுகளையும் விலக்கிக் கொள்வது தொடர்பாக வரும் 19 ஆம் தேதி அரசு பரிசீலிக்கவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.