"தலிபான்களை எதிர்ப்போம்; பெண் கல்விக்காக குரல் கொடுப்போம்" - ஆப்கன் ஆசிரியர்கள்

"தலிபான்களை எதிர்ப்போம்; பெண் கல்விக்காக குரல் கொடுப்போம்" - ஆப்கன் ஆசிரியர்கள்
"தலிபான்களை எதிர்ப்போம்; பெண் கல்விக்காக குரல் கொடுப்போம்" - ஆப்கன் ஆசிரியர்கள்

ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றியுள்ளனர். இந்நிலையில் பெண்களின் உரிமை அங்கு கேள்விக்குறியாகி உள்ளது. குறிப்பாக பெண்களை தலிபான்கள் கல்வி பயில அனுமதிப்பார்களா? என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. 

இத்தகையச் சூழலில் தலிபான்கள் தங்களை கொன்றாலும் பரவாயில்லை. தொடர்ந்து பெண் கல்விக்காக குரல் கொடுப்போம் என ஆப்கன் நாட்டை சார்ந்த ஆசிரியர்கள் உறுதியாக தெரிவித்துள்ளனர். என்ன நடந்தாலும் தங்களது போராட்டம் தொடரும் என அவர்கள் தெரிவித்துள்ளனர். 

தலிபான்கள் ஆப்கானிஸ்தானில் இருபாலர் கல்வி முறைக்கு மறுப்பு தெரிவித்துள்ளனர். ஆண்கள் மற்றும் பெண்களுக்கு தனித்தனி கல்விக் கூடங்கள் எனவும் தெரிவித்துள்ளனர். “நான் எனது பணியை எண்ணி பெருமை கொள்கிறேன். எனது உயிர் மூச்சு இருக்கும் வரை இதனை நிறுத்த மாட்டேன்” என ஆசிரியர் ஒருவர் டெலிகிராப் பத்திரிகைக்கு தெரிவித்துள்ளார். 

தன்னார்வ அமைப்பை சார்ந்த 100க்கும் மேற்பட்ட பள்ளிகளின் ஆசிரியர்கள், பெண் கல்வி தொடர்பாக பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். 

“தலிபான்கள் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியுள்ளதால் நாங்கள் எல்லோரும் அச்சத்தில் உறைந்துள்ளோம். இப்போதைக்கு பெண்கள் வழக்கம் போல பள்ளிக்கும், பணிக்கும் செல்லலாம் என தெரிவித்துள்ளனர். அவர்கள் அதை செய்யக்கூடாது என தடுத்தாலும் அதை எதிர்த்து நிற்கும் நெஞ்சுரம் எங்களிடம் உள்ளது” என தெரிவித்துள்ளார் மற்றொரு ஆசிரியர். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com